India Languages, asked by dineshduraisamy70, 8 months ago

கற்றவருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு என்பதை திருவிளையாடற்புராண வழி விளக்குக​

Answers

Answered by rajvirsingh327
1

Answer:

what are you telling I can't understand

Answered by Anonymous
1
தமிழ் மொழியில் எழுந்த புராணங்களுள் மூன்றினை மட்டும் வேறாகப் பிரித்துச் சிவபெருமானின் மூன்று கண்களோடும் ஒப்பிட்டு வளர்த்தனர். இவற்றை முப்பெரும் புராணம் என்பது மரபு.

சேக்கிழாரின் பெரியபுராணத்தைச் சிவனின் வலக்கண் என்று போற்றுவர். பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தைச் சிவனின் இடக்கண்ணுடன் ஒப்புமை கூறுவர். கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தைச் சிவனின் நெற்றிக் கண்ணுடன் இணைத்துப் பேசுவர்.

இவற்றுள் மதுரைத் தலபுராணமாகப் போற்றப்படுவது திருவிளையாடல் புராணம். ஒரு நகரத்தில் சிவபெருமான் தம் அடியவர்களோடும், சிற்றுயிர்களோடும் நிகழ்த்திய விளையாட்டு நிகழ்வுகளை இந்நூல் அழகுடன் விரித்துரைத்து ஒரு பெருங்காப்பியமாக உயர்ந்துள்ளது. இறைவனும் - அடியவர்களும் ஒருவர்பால் ஒருவர் அருளும் - அன்பும் பூண்டு ஒழுகிய திறம் பெரியபுராணத்திலும் உண்டு. திருவிளையாடல் புராணத்திலும் உண்டு. எனினும் இவற்றிடையே சிறிது வேறுபாடு உண்டு. பெரியபுராணம், செயற்கரிய செயல் செய்த மானுடர்கள் இறைவனை மண்ணின்பால் ஈர்த்த வரலாறுகளின் தொகுதி; இதில் அடியவர் உறைப்பு (உறுதியான பக்தி) மிகுந்து காணப்படும். திருவிளையாடல் புராணம், சிவபெருமான் அடியவர்கள் பாலும், சிற்றுயிர்கள் பாலும் கொண்ட அளப்பரிய அன்பால் கருணை மிகுந்து, தாமே மண்ணுலகில் வந்து அருள் செய்த வரலாறுகளைக் கூறுவது; இதில் இறைவனின் கருணை வெளிப்பாடு மிகுந்து காணப்படும்.
Similar questions