ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை _______இன் அறிவுரையின்படி ஏற்றுக் கொண்டார். அ) கிரகவர்மன் ஆ) அவலோகிதேஷ்வர போதிசத்வர் இ) பிரபாகர வர்த்தனர் ஈ) போனி
Answers
Answered by
0
Answer:
question in english??
Answered by
0
அவலோகிதேஷ்வர போதிசத்வர்
ஹர்ஷர்
- பிரபாகர வர்த்தனரின் இளைய மகனான ஹர்ஷ வர்த்தனர் தன் சகோதரன் ராஜ்ய வர்த்தனரின் மறைவிற்கு பிறகு தானேஸ்வரத்தின் அரசராக அரியணை ஏறினார்.
- ஹர்ஷர் தன் அண்டையில் உள்ள சிற்றரசுகளின் பலவீனத்தினை அறிந்து, அதன்மீது போரிட்டு வென்று அதனை தன்னுடன் இணைத்து தன் அரசே பேரரசாக மாற்றினார்.
- கன்னோசியின் அமைச்சரான போனியின் அறிவுரையின்படி கன்னோசியின் முக்கியமானவர்கள் ஹர்ஷரை கன்னோசியின் அரியணையில் அமர அழைப்பு விடுத்தனர்.
- தொடக்கத்தில் தயக்கம் காட்டிய ஹர்ஷர் அவலோகிதேஷ்வர போதிசத்வரின் அறிவுரையின்படி ராஜ்புத்திரர், சிலாதித்யா போன்ற பட்டங்களுடன் கன்னோசியின் அரசரானார்.
- அதன் பிறகு தானேஸ்வரமும், கன்னோசியும் ஒன்றாக இணைந்தது.
- ஹர்ஷர் தன் தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
Similar questions