ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?
Answers
Answered by
0
ஹர்ஷர் கன்னோசியின் அரசரான விதம்
- பிரபாகர வர்த்தனர் அவர்கள் கன்னோசியை ஆண்ட மெளகாரி வம்சத்தினை சார்ந்த கிரகவர்மனுக்கு தன் மகளான ராஜ்யஸ்ரீயைத் திருமணம் செய்து கொடுத்தார்.
- வங்க மன்னன் கிரகவர்மனை கொன்றார்.
- தன் சகோதரியின் கணவனை கொன்ற வங்க மன்னனின் மீது போர் தொடுத்த தானேஸ்வரத்தின் அரசர் ஹர்ஷர் அவனை கொன்றார்.
- கன்னோசியின் முக்கியமானவர்கள் கன்னோசியின் அமைச்சரான போனியின் அறிவுரையின்படி ஹர்ஷரை கன்னோசியின் அரியணையில் அமர அழைப்பு விடுத்தனர்.
- தொடக்கத்தில் தயக்கம் காட்டிய ஹர்ஷர் அவலோகிதேஷ்வர போதிசத்வரின் அறிவுரையின்படி ராஜ்புத்திரர், சிலாதித்யா போன்ற பட்டங்களுடன் கன்னோசியின் அரசரானார்.
- அதன் பிறகு தானேஸ்வரமும், கன்னோசியும் ஒன்றாக இணைந்தது.
- ஹர்ஷர் தன் தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
Similar questions