தக்கோலப் போரின் முக்கியத்துவம் குறித்துக் கூறுக.
Answers
Answered by
1
Explanation:
தக்கோலப் போர் கி.பி. 949 ஆம் வருடம் வேலூர் மாவட்டத்திலுள்ள தக்கோலம் என்னும் ஊரில் நடைபெற்றது. இந்தப் போரில் இராஜாதித்தர் தலைமையிலான முதலாம் பராந்தக சோழனின் சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் தலைமையிலான இராட்டிரகூட படையும் மோதின. இப்போரில் சோழர் படைக்குத் துணையாகச் சேரரின் படைகளும் இராட்டிரகூடர் படைக்குத் துணையாக கங்கரின் படையும் வந்தன. மிகவும் கொடூரமாக நடந்த இப்போரில் கங்க மன்னன் இரண்டாம் பூதுகனின் (கன்னரதேவனின் மைத்துனன்) நஞ்சு தோய்ந்த அம்பினால் சோழ இளவரசர் இராஜாதித்தர் கொல்லப்பட்டார். இதனால் சோழர் படை தோல்வியுற்றது
Answered by
0
தக்கோலப் போரின் முக்கியத்துவம்
- ராஷ்டிரகூட அரசர்களின்ல கடைசி அரசர் மூன்றாம் கிருஷ்ணர் ஆவார்.
- இவர் அரியணை ஏறியவுடன் தன் மைத்துனர் புதுங்கரின் துணையோடு சோழ அரசரின் மீது படையெடுத்தார்.
- பொ.ஆ.943 ஆம் ஆண்டில் காஞ்சியும், தஞ்சாவூரும் இவர்களால் கைப்பற்றப்பட்டன.
- ஆற்காடு, செங்கல் பட்டு, வேலூர் ஆகிய பகுதிகளை கொண்ட தொண்டை மண்டலம் ஆனது மூன்றாம் கிருஷ்ணர் படையின் கட்டுப்பாட்டில் இருந்தது.
- பொ.ஆ. 949 ஆம் ஆண்டு தக்கோலம் (தற்போதைய வேலூர் மாவட்டம்) என்ற இடத்தில் நடந்த போரில் மூன்றாம் கிருஷ்ணர் ராஜாதித்யனின் சோழர் படைகளை தோற்கடித்தார்.
- அதன் பிறகு மூன்றாம் கிருஷ்ணர் தெற்கே ராமேஸ்வரம் வரை படை கொண்டு சென்றார்.
- அங்கே வெற்றியின் சின்னமாக ஒரு தூணை நிறுவினார்.
Similar questions