பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?
Answers
Answered by
1
பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு
- வங்காளத்தினை ஆட்சி செய்த பாலர் வம்சத்தினை சார்ந்த தர்ம பாலர் என்ற அரசன் விக்ரமசீலா என்ற பெயரில் பெளத்த மடத்தினையும், சோமபுரியில் பெரியதொரு பெளத்த விகாரையும் கட்டினார்.
- இவர் தன் ஆன்மீக குருவான ஹரிஷ்பத்ரர் என்ற பெளத்த மத தத்துவ ஞானியை ஆதரித்தார்.
- பால வம்ச ஆட்சியின் போது நாளந்தா பல்கலைக் கழகம் பெளத்த மதக் கொள்கையை போதிக்கும் முதன்மையான மையமாக திகழ்ந்தது.
- பாலர் வம்ச மனனர் தேவ பாலர், சுமத்ரா மன்னர் பாலபுத்ர தேவன் நாளந்தாவில் கட்டிய பெளத்த மடாலயத்தினை பராமரிக்க ஐந்து கிராமங்களை நன்கொடையாக வழங்கினார்.
- முதலாம் மகிபாலர் அவர்கள் சாரநாத், நாளந்தா, புத்த கயா ஆகிய இடங்களில் புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கினார்.
Similar questions