India Languages, asked by pritheshalucy, 8 months ago

தலைப்பு
முன்னுரை சுற்றுச்சூழல் துாய்மை - தனிமனிதத் துாய்மை - வீடு தூய்மையானால்
நாடும் துாய்மையாகும் - நோய்கள் வராமல் தடுக்க அரசு முயற்சிகள் - மாசு நீக்கி துாய்மை இந்தியா
காண்போம்
முடிவுரை.
3)விடையளி:​

Answers

Answered by peermohamed54362
7

Answer:

முன்னுரை

“கலப்பை” எடுத்த கைகள் கணிப்பொறியையும் தொன்மை நகரங்கள் தொழிற்சாலை நகரங்களாகவும், நீரோடைகள் யாவும் நீற்றுப்போன ஓடைகளாகவும்” மாறிய இக்காலத்தில் இந்தியாவின் தூய்மை என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

தூய்மை இந்தியாவின் குறிக்கோள்கள்

சமுதாயத்தில் தூய்மை

நீர் தூய்மை

நிலத்தூய்மை

காற்றுத் தூய்மை

சமுதாயத்தில் தூய்மை

நாம் ஒவ்வொருவரும் குப்பைகள் அற்ற சமுதாய்ததை உருவாக்கிட உறுதிகொள்ள வேண்டும். குப்பைகளை வீட்டிலேயே மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து அதனை குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினைக் குறைத்து அதற்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய காகித பைகளை பயன்படுத்த வேண்டும்.

குப்பைத்தொட்டிகளை வீதிகள் தோறும் அமைத்திட வேண்டும். தெருக்களையும் சாலைகளையும் தூய்மையாக வைத்திட நகராட்சி ஊழியர்கள் தினமும் அதனை தூய்மை செய்திட வேண்டும்.

நீர் தூய்மை

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பெரும்பாலும் நீரில் கலப்பதனால் ஆறுகள் ஓடைகள் போன்றவை மாசடைகின்றன.

எனவே தொழிற்சாலை கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்த பின்னரே அதனை வெளியேற்ற வேண்டும்.

தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவன கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்கின்றனவா என்பதனை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும்.

நிலத்தூய்மை

தொழிற்சாலை கழிவுகளை நிலத்தினுள் கொட்டுவதால் நிலத்தடி நீரானது பெருமளவில் மாசடைகின்றன. குறிப்பாக தோல் பதனிடும் தொழிற்சாலைகள் சாயபட்டறைகள் போன்றவை தங்கள் கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் நிலத்தினுள் கொட்டுவதால் நிலமானது மாசடைகின்றது.

தொழிற்சாலைகள் தேவை இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட இக்காலத்தில் அதனை முறையாக பராமரித்து அதன் நடவடிக்கைகளை கண்பகாணிப்பது நமது கடமையாகும்.

காற்றுத் தூய்மை

காடுகள் அழிவதை தடுப்பதும் மரங்களை பாதுகாப்பதும் புதிய மரக்கன்றுகளை நடுவதும் பெட்ரோல் - டீசல் மாற்றாக இயற்கை எரிபொருளை பயன்படுத்துவதுமே காற்றை தூய்மையாக்குவதற்கு சிறந்த வழிமுறைகளாகும்.

முடிவுரை

மொபைல் பிடித்த கையால் மாப்பினை பிடி

துடிக்கும் இளைஞனே வா!

உன் துடிக்கும் கரங்களால் துடைப்பத்தை பிடி

துடிக்கும் இளைஞனே வா!

இந்தியாவின் தூய்மையை உலகத்திற்கு காட்டு.

Explanation:

pls mark as brainlieast answer and follow me

Similar questions