எல்லோராவிலுள்ள கைலாசநாதர் குகைக்கோயில் பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
1
Explanation:
எல்லோரா கைலாசநாதர் கோயில் (Kailashnath Temple, Ellora) தக்கணத்துக் கோயிற் கட்டுமானங்களில் ஒன்றாகும். இந்தியாவில் மகராஷ்டிர மாநிலத்திலுள்ள எல்லோராவில் அமைந்துள்ள குகைக்கோயில்களில் இதுவும் ஒன்று. பெரியதொரு மலையைக் குடைந்து இவை அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. இராஷ்டிரகூட அரசன் முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக் காலத்தில் இவை உருவாக்கப்பட்டன. இக்கோயில் மலைத்தளி வகையைச் சார்ந்தது. திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும் ஒருங்கே கொண்டு விளங்குகின்றது. மாமல்லபுரத்து மலைத்தளிகளைப் போலன்றி முழுமையான ஆலயமொன்றின் அம்சங்களைக் கொண்ட பிரம்மாண்டமான மலைத்தளியாக விளங்குகின்றது.
Answered by
0
எல்லோராவில் உள்ள கைலாசநாதர் குகைக்கோயில்
- எல்லோராவில் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாசநாதர் கோயில் நம் கண்களை கவருபவையாக உள்ளன.
- எட்டாம் நூற்றாண்டில் இராஷ்டிரகூட மன்னர் முதலாம் கிருஷ்ணரின் ஆட்சிக் காலத்தில் ஒரே பாறையைக் குடைந்து கைலாசநாதர் கோயில் உருவாக்கப்பட்டது.
- கைலாசநாதர் கோயில் உள்ள சிற்பங்களின் சிறந்த சான்றாக தசாவதார பைரவர், கைலாச மலையை ராவணன் அசைப்பது, நடனமாடும் சிவன், விஷ்ணுவும், லட்சுமியும் இசையில் லயித்திருப்பது போன்றவை உள்ளன.
- எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலில் வரையப்பட்ட கவின்மிகு ஓவியங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டு இன்றளவும் சிறப்புறக் காட்சி தருகிறது.
- கைலாசநாதர் கோயிலில் உள்ள சிற்பங்கள் புராண இதிகாச கதைகளின் நிகழ்ச்சியை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
Attachments:
Similar questions