தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கினை எழுதுக.
Answers
Answered by
0
தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு
ஆழ்வார்
- பன்னிரு ஆழ்வார்களும் வைணவ சமய பாடல்களை இயற்றினர்.
- ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இவர்களின் பாடல்கள் நாதமுனியால் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டது.
- கண்ணனின் குழந்தைப் பருவத்தினை பற்றி பாடல்கள் இயற்றிய பெரியாழ்வார் ஸ்ரீவல்லபனின் ஆட்சிக் காலத்தில் திருவில்லிபுத்தூல் வாழ்ந்தார்.
- பன்னிரு ஆழ்வார்களின் பெண்ணான ஆண்டாளின் பாடல்கள், கண்ணன் மீது ஆண்டாள் கொண்டிருந்த அன்பினை வெளிப்படுத்துகின்றது.
- ஆழ்வார்களில் தலைச் சிறந்தவரான நம்மாழ்வார் இன்றைய தூத்துக்குடி மாவட்த்தில் உள்ள குருகூரில் (ஆழ்வார்திருநகரி) வாழ்ந்தார்.
- இவர் திருவாய்மொழி உள்ளிட்ட நான்கு நூல்களை இயற்றினார்.
- வைணவர்கள், நம்மாழ்வாரின் பாடல்கள் நான்கு வேதங்களின் சாரத்தை வடித்தெடுத்து இயற்றப்பட்டதாக நம்புகின்றனர்.
- ஆழ்வார்கள் தங்களின் பாடல்கள் மூலமாக வைணவத்தினை பரப்பினர்.
Attachments:
Similar questions