மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்களின் கட்டடக்கலை மேன்மைகளை விளக்குக.
Answers
Answered by
0
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்களின் கட்டடக்கலை மேன்மைகள்
- பல்லவ மன்னர் ராஜ சிம்மனின் ஆட்சிக் காலத்தில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் கட்டப்பட்டது.
- இந்த கடற்கரைக் கோயில் தென் இந்தியக் கட்டுமானக் கோயில்களில் முதன்மையானதாகவும், பல்லவர்களின் கட்டடக்கலையின் அடையாளமாகவும் உள்ளது.
- மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்களில் உள்ள மூன்று கருவறைகளில் முக்கியமானவை சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு படைக்கப்பட்ட கருவறை ஆகும்.
- விஷ்ணு கருவறையின் வெளிச் சுவர் மற்றும் சுற்றுச் சுவர்களில் விரிவாக செதுக்கப்பட்ட தொடர் சிற்பங்கள் உள்ளன.
- மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆனது பாறையில் செதுக்கப்பட்ட ஐந்து அடுக்குகளைக் கொண்டு உள்ளது.
- பல்லவர்கள் கட்டிய மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்களின் சிறப்பு அமைப்பாக ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விமானங்கள், பஞ்ச பாண்டவர் ரதங்கள் முதலியன உள்ளன.
Attachments:
Similar questions