இந்தியாவில் கஜினி மாமுதின் இராணுவத் தாக்குதல்களுக்கான காரணங்கள் என்னென்ன?
Answers
Answered by
0
Answer:
நம் நாட்டில் உள்ள வளங்களை பரித்து செல்வதே முதன்மை காரணம்
Answered by
0
இந்தியாவில் கஜினி மாமுதின் இராணுவத் தாக்குதல்களுக்கான காரணங்கள்
- மாமுது தன் சகோதரர் இஸ்மாயிலை தோற்கடித்த தன் 27 வயதில் கஜினியின் அரசராக அரியணை ஏறினார்.
- கஜினி மாமுது 32 ஆண்டுகள் அரியணையில் இருந்தார்.
- இவர் 17 முறை இந்தியா மீது தாக்குதல்களை நடத்தினார்.
- செல்வ செழிப்பு மிக்க இந்துக் கோயில்களின் நகைகள், சொத்துக்களை கொள்ளை அடிப்பதே கஜினி மாமுதின் இராணுவத் தாக்குதலில் முக்கிய நோக்கமாக இருந்தது.
- நகைகளை கொள்ளை அடித்த பின்னர் கஜினி மாமுது படைகள் கோயில்களை இடிப்பது, சிலைகளைத் தகர்ப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
- இஸ்லாமியர்களான கஜினி மாமுதுவின் படை வீரர்கள் பிற மதத்தினரை வெட்டிக் கொல்வது மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது ஆகியவற்றின் மூலமாக தங்களின் மதப்பற்றினை வெளிப்படுத்தினர்.
- கஜினி மாமுது பெரும் படையை பராமரிக்கிற செலவினை ஈடு செய்யும் தேவையினால் கொள்ளை அடித்தார்.
Similar questions