சோழர் காலத்து இலக்கிய வடிவ வரலாற்று நூல்கள் எவை?
Answers
Answered by
0
Answer:
can you write it in English so everyone can understand
Answered by
0
சோழர் காலத்து இலக்கிய வடிவ வரலாற்று நூல்கள்
- சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இலக்கியங்கள் உன்னத நிலையினை அடைந்தன.
- சோழர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.
- சோழர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த முக்கிய சமய இலக்கியப் பணி சைவ, வைணவ நூல்கள் தொகுத்து முறைப்படுத்தப்பட்டதாகும்.
- சோழர்களின் ஆட்சிக் காலத்தில் பெருங்காவிய நூலான கம்ப இராமாணயம் இயற்றப்பட்டது.
- சோழர் காலத்து இலக்கிய வடிவ வரலாற்று நூல்கள் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தர் எழுதிய குலோத்துங்கச் சோழன் பிள்ளைத் தமிழ் மற்றும் மூவருலா ஆகும்.
- சோழர்கள் காலத்தில் இயற்றப்பட்ட இலக்கண நூல்கள் நேமிநாதம், வீரசோழியம், நன்னூல் முதலியன ஆகும்.
- மேலும் பாண்டிக்கோவை, தக்கயாகப்பரணி போன்ற இலக்கியப் படைப்புகளும் இயற்றப்பட்டன.
Similar questions