தமிழ்ச் சங்கம் குறித்து எழுதுக.
Answers
Answer:
தமிழ்ச்சங்கம் என்னும் பெயரில் பல்வேறு கால-கட்டங்களில் பல்வேறு சங்கங்கள் நிலவிவந்தன.
சங்கம் என்பது தமிழை வளர்க்கும் பொருட்டு புலவர்கள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பு. பழங்காலத்தில் இருந்த தமிழாய்வு மாணவர்கள் மற்றும் கவிஞர்களின் ஒருங்கமைப்பு ஆகும். இந்தச் சங்க அமைப்பு அமைப்பு கூடல் என்றும் குறிப்பிடப்படுகிறது.பண்டைய காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்துள்ளதாக இறையனார் களவியல் நக்கீரர் உரை கூறுகிறது. மூன்றாவது தமிழ்ச்சங்கம் இருந்த இடம் தற்போதுள்ள மதுரையாகும். தேவாரம், திருவிளையாடல், பெரியப் புராணம் மற்றும் இறையனார் அகப்பொருள் போன்ற பல்வேறு இலக்கியங்கள் 'சங்கம்' என்ற சொல்லால் இதனைக் குறிப்பிடுகின்றன.இவை அனைத்தும் [[சங்கம் (முச்சங்கம்)|நங்ககாலத்தில் இருந்த சங்கங்களையே குறிப்பிடுகின்றன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு.400 முதல் கி.பி.200 வரை இருந்துள்ளது. இருப்பினும் சங்கத் தோற்றத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே சங்கம் என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளது. புணர்கூட்டு என்னும் சொல் சங்கத்தை உணர்த்தும் சொல்லாகப் பயின்றுவந்துள்ளது.
தமிழ்ச் சங்கம்
- பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழ்ச் சங்கங்களை உருவாக்கினர்.
- தமிழை வளர்க்கவும், மகாபாரதத்தினை தமிழில் மொழிபெயர்க்கவும் ஒரு கலைக்கழகம் அமைக்கப்பட்டதாக ஒரு செப்பேடு கூறுகிறது.
- பொ.ஆ. ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்த இறையனார் அகப்பொருள் என்ற நூலில் சங்கம் என்ற சொல் ஆனது கலைக்கழகம் என்ற பொருளில் இடம் பெற்று உள்ளது.
- எனினும் பல்லவர்களுக்கு முந்தைய இலக்கியங்களில் சங்கம் என்ற சொல் வேறு பொருளினை குறித்தது.
- திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் போன்ற பிந்தைய இடைக் கால நூல்களில் சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளினை தந்தது.
- பாண்டியர் ஆட்சிக் காலத்தில் திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசகம், திருக்கோவை போன்ற இலக்கிய நூல்கள் இயற்றப்பட்டன.