India Languages, asked by sujayramachandiran, 9 months ago

குற்றியலிகரம் என்றால் என்ன‌‌?​

Answers

Answered by AASHU2428
8

vanakkam nanba:

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்

எடுத்துக்காட்டு

நாடு + யாது -> நாடியாது

கொக்கு + யாது -> கொக்கியாது

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

கேள் + மியா -> கேண்மியா

கண்டேன் + யான் -> கண்டேனியான்

Answered by deepikajlmhjkknacin
1

Answer:

புணர்மொழிக் குற்றியலிகரம் என்பது இரண்டுசொற்கள் சேரும் போது உருவாகும். குற்றியலிகரம் ஆகும். முதலில் உள்ள சொல்லின் இறுதியில் குற்றியலுகர எழுத்து வந்து,இரண்டாம் சொல் 'ய' என்ற எழுத்தில் தொடங்கும்போது,குற்றியலுகரத்தில் உள்ள உகரமானது, இகரமாகத் திரியும்.

Similar questions