History, asked by anjalin, 8 months ago

சோழ‌ர் கால‌த்‌தி‌ல் வசூ‌லி‌க்க‌ப்ப‌ட்ட வ‌ரிக‌ள் எ‌ன்னெ‌ன்ன?

Answers

Answered by dradhikaharini1983
0

Answer:

அரசாங்கத்தின் முக்கிய வருவாய் நிலவரி. எனவே நிலம் அளக்கப்பட்டு தர வாரியாகப் பிரிக்கப்பட்டு வரி வசூல் செய்யப் பரவுரித் திணைக்களம் என்ற அமைப்பு இருந்தது. இதன் தலைவர் பரவுரித் திணைக்கள நாயகம் என அழைக்கப்பட்டார். மேலும் கண்காணி வரிப்பொத்தக நாயகம், வரியிலீடு முகவேட்டி, பாலோடை எனப் பலர் இருந்தனர். இவர்கள் நிலத் தொடர்பான அலுவல்களைப் புரிந்தனர்.

சோழப்பேரரசில் வரிச்சுமை ஏராளமாக இருந்தது. குடிமக்கள் மீது பல வரிகள் விதிக்கப்பட்டன. அவை;

ஊர்க்கழஞ்சு (ஊரின் பொதுவான ஓடைக்காக)

குமரகச் சரணம் (முருகன் கோவில் வரி)

மீன்பாடம்(மீன்பிடிக்க)

கீழிறைப்பாட்டம் (சிறுவரிகள்)

முத்தாவணம் (விற்பனைவரி)

திங்கள் மோறை ( ஒரு வகை மாதவரி)

வேலிக்காசு(ஒரு வேலி நிலத்திற்கு இவ்வளவு என )

நாட்டாட்சி (நாட்டுவரி)

ஊராட்சி (ஊர்வரி)

வட்டநாழி( கழனிவரி நாழிக்கணக்கில்)

கண்ணாலக்காணம்( திருமணவரி)

வண்ணாரப்பாறை( சலவையாளர் பயன்படுத்திய பாறைக்காக)

சக்காணம் (குயவர் வரி)

நீர்க்கூலி (தண்ணீர் வரி)

தனிக்கூறை (துணிநெய்வோர் வரி)

தட்டார் பாட்டம்( பொற்கொல்லர் வரி)

ஆட்டுநிறை வரி( ஆட்டுவரி)

நல்லாநல்லெருது (மாட்டுவரி)

ஊடுபோக்கு (தானியம் பயிரிட வரி)

வாலாக்காணம் (வீட்டுவரி) உல்கு (சுங்கம்)

ஓடக்கூலி (ஓடம்மீது ஏற வரி)

மன்றுபாடு (நீதிமன்ற வரி)

தீயெறி(கோயில் தீப்பந்தவரி)

ஈழப்பூட்சி (கள் இறக்க வரி)

எனப்பல வரிகள் இருந்தன நானூற்றுக்கு மேற்பட்ட வரிகள் இருந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயில்களுக்கு வரிவிலக்கும் உண்டு. வரிச்சுமை அதிகமானதால் மக்கள் சிலர் ஊர்விட்டு நீங்கினர். சிலர் அரசாங்கத்திடம் மன்றாடி வரியைக் குறைத்துக் கொண்டனர்.

அந்தனர்களுக்கும் சைவ வேளாளர்களுக்கும் வரிச்சலுகை மிகுதியாக இருந்தது. இதனால் வலங்கை இடங்கைப் பிரிவினரான சாதாரன மக்கள் ஒன்று கூடி எதிர்த்துப் புரட்சி செய்தனர். கோவில்களை இடித்தனர். இதன் காரணமாக கி.பி.1070 -ல் அதிராஜேந்திரன் என்ற மன்னன் கொல்லப்பட்டான். பெருநிலச் சொந்தக்காரர்களாய் இருந்த உயர்சாதியினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக சாதாரண வாணிக மக்களும் நடுத்தர மக்களும் எதிர்த்துப் போராடிய வரலாற்றைக் கல்வெட்டு கூறுகிறது.

hope this will help you buddy!!!

Answered by steffiaspinno
0

சோழ‌ர் கால‌த்‌தி‌ல் வசூ‌லி‌க்க‌ப்ப‌ட்ட வ‌ரிக‌ள்

  • சோழ‌ர் கால‌த்‌‌தி‌ல் பெரு‌ம்பாலு‌ம் வ‌ரிக‌ள் ‌விவசாய ‌நில‌த்‌தி‌ல் ‌விளை‌‌ந்த நெ‌ல் போ‌ன்ற பொரு‌ட்களாகவே வசூ‌லி‌க்க‌ப்‌ப‌ட்டன.
  • இறை, கா‌ணி‌கட‌ன், இறை க‌ட்டின கா‌ணி க‌ட‌ன்,
  • கடமை போ‌ன்ற பல வ‌ரிக‌ள் வசூ‌லி‌க்க‌ப்ப‌ட்டன. அ‌‌தி‌ல் மு‌க்‌கியமானதாக இரு‌ந்த குடிமை வ‌ரி எ‌ன்பது ‌நில‌த்தை‌க் கு‌த்தகை‌க்கு‌ப் பெ‌ற்று வேளா‌ண்மை செ‌ய்தவ‌ர்க‌ள் அர‌சி‌ற்கு‌ம் ‌நில உடைமையாள‌ர்க‌ளு‌க்கு‌ம் செலு‌த்‌திய வ‌ரி ஆகு‌ம்.
  • அர‌சரு‌ம் உ‌ள்ளூ‌ர்‌த் தலைவ‌ர்களு‌ம் ஓ‌ப்படி எ‌ன்ற வ‌ரியை வ‌சூ‌லி‌த்தன‌ர்.
  • விளை‌ பொருளாக‌ச் செலு‌த்த‌ப்ப‌ட்ட வ‌ரி இறை க‌ட்டின நெ‌ல்லு என அழை‌க்க‌ப்ப‌டு‌கிறது.
  • இ‌ந்த வ‌ரிக‌ள் பெரு‌ம்பாலு‌ம் கா‌வி‌ரி சமவெ‌ளி‌ப் பகு‌தி‌யி‌ல் தா‌ன் நடைமுறை‌யி‌ல் உ‌ள்ளது.
  • ஊ‌ர் அ‌ள‌வி‌ல் வ‌ரிகளை வசூ‌லி‌த்து அர‌சி‌ற்கு செலு‌த்து‌ம் பொறு‌ப்பு ஊரா‌ரி‌‌ட‌ம் இரு‌ந்தது.
Similar questions