சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
can't understand ur words
Answered by
0
சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள்
- முதலாம் இராஜேந்திர சோழன் தென் ஆற்காடு பகுதியில் உள்ள எண்ணாயிரத்தில் வேதக் கல்லூரி ஒன்றினை நிறுவினார்.
- இந்த வேதக் கல்லூரியில் 340 மாணவர்கள் பயின்றார்.
- இங்கு 14 ஆசிரியர்களால் வேதம், இலக்கணம், வேதாந்தம் முதலியன கற்பிக்கப்பட்டன.
- முதலாம் இராஜேந்திர சோழனுக்கு அடுத்து வந்த அரசர்களும் கல்வியை போற்றி வளர்த்தார்.
- இதன் விளைவாக 1043ல் புதுச்சேரிக்கு அருகே உள்ள திருபுவனி மற்றும் 1061ல் செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள திருமுக்கூடல் ஆகிய இரு இடங்களிலும் சமஸ்கிருத கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
- வேதங்கள், சமஸ்கிருத இலக்கணம், சமயம், தத்துவங்கள் ஆகியவை இந்த சமஸ்கிருத கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டன.
- கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிகளுக்கு தகுந்தவாறு ஊதியமாக நிலம் வழங்கப்பட்டது.
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
English,
4 months ago
Computer Science,
9 months ago
Social Sciences,
1 year ago