"ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக __________ இடம் பணி செய்தனர்.அ) காகதியர் ஆ) ஹொய்சாளர் இ) பீஜப்பூர் சுல்தான் ஈ) யாதவர் "
Answers
Answered by
0
ஹொய்சாளர்
விஜயநகர பேரரசின் தோற்றம்
- சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகியோர் ஹொய்சாள அரசரிடம் சில காலம் பணி செய்தனர்.
- சில காலம் கழித்து ஹொய்சாள அரசர் மூன்றாம் பல்லாலர் மதுரை சுல்தானால் கொல்லப்பட்ட பிறகு இவர்கள் தங்களை சுதந்திர அரசர்களாக நிலைநிறுத்திக் கொண்டு, 1336ல் புதிய அரசிற்கான அடித்தளத்தினை அமைத்தனர்.
- தொடக்க காலத்தில் துங்கபத்திரை ஆற்றின் வடக்கு கரையில் அனகொண்டி அருகே இருந்த தலைநகர் விரைவில் ஆற்றின் தென்கரையில் உள்ள ஹொய்சாள நகரமான ஹொசபட்னா என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது.
- தலைநகரம் ஆனது விரிவுபடுத்தப்பட்டு விஜயநகரம் (வெற்றியின் நகரம்) என பெயரிடப்பட்டது.
- அதன்பிறகு ஹரிஹரர் மற்றும் புக்கர் தங்களை விஜயநகர அல்லது கர்நாடக விஜயநரக அரசர்களாக பிரகடனப்படுத்தினர்.
Answered by
0
Answer:
Hoysalar dynasty
Explanation:
please mark the answer as brainliest
Similar questions