விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது.
Answers
Answered by
0
Answer:
விஜயநகரப் பேரரசு (1336 - 1646), தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும்.[3] [4] தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே[5][6]வித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக ஹம்பி விளங்குகிறது.[7]
Answered by
0
விஜயநகர பேரரசின் தோற்றம்
- சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகியோர் ஹொய்சாள அரசரிடம் சில காலம் பணி செய்தனர்.
- 1336ல் இருவரும் புதிய அரசிற்கான அடித்தளத்தினை அமைத்தனர்.
- இவர்களின் தலைநகர் துங்கபத்திரை ஆற்றின் வடக்கு கரையில் அனகொண்டி அருகே இருந்து ஆற்றின் தென்கரையில் உள்ள ஹொய்சாள நகரமான ஹொசபட்னா என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது.
- விரிவுபடுத்தப்பட்ட தலைநகரம் வெற்றியின் நகரம் என்ற பொருளுடைய விஜயநகரம் என பெயரிடப்பட்டது.
- அதன்பிறகு ஹரிஹரர் மற்றும் புக்கர் தங்களை விஜயநகர அல்லது கர்நாடக விஜயநரக அரசர்களாக பிரகடனப்படுத்தினர்.
- விஜயநகர அரசர்கள் சாளுக்கியர்களின் முத்திரையான பன்றி (வராகம்) உருவத்தினையே தங்களின் அரச முத்திரையாக கொண்டனர்.
Similar questions