விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.
Answers
Answered by
1
விஜயநகரப் பேரரசு (1336 - 1646), தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும்.[3] [4] தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே[5][6]வித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக ஹம்பி விளங்குகிறது.[7]
Answered by
1
விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள்
- விஜயநகர அரசினை பற்றி கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ள அதிக அளவிலான செப்புப் பட்டயங்கள் ஆகியவை இலக்கியச் சான்றுகள் தருகின்ற செய்திகளை விட அதிகமான செய்திகளை தருகின்றன.
- விஜயநகரைப் பற்றி அறிய உதவும் வளமான தொல்லியல் சான்றுகள் அந்த காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள், அரண்மணைகள், கோட்டைகள், மசூதிகள் முதலியன ஆகும்.
- விஜயநகர அரசு காலத்தினை சார்ந்த நாணயச் சான்றுகளும் அதிக அளவில் கிடைத்துள்ளன.
- மொராக்கோவின் இபன் பதூதா, பாரசீகத்தின் அப்துர் ரசாக், ரஷியாவின் நிகிடின், போர்த்துகல்லின் டோமிங்கோ பயஸ், இத்தாலியின் நூனிஸ் ஆகிய வெளிநாட்டு பயணிகளின் குறிப்புகள் விஜயநகர அரசை பற்றி அறிய உதவுகிறது.
Similar questions