History, asked by anjalin, 9 months ago

நாயக்க முறை ப‌ற்‌‌றி ‌சிறுகு‌‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by steffiaspinno
0

நாயக்க முறை  

  • 13 ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் இரு‌ந்தே தெலுங்கு, கன்னடப் பகுதிகளில் இராணுவத் தலைவர் அல்லது இராணுவ வீரர் என்ற பொருளில் நாய‌க் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது.
  • 13 ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் ஒரு நாயக்கின் இராணுவ சேவைக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாயை வழங்கும் முறை காகத்திய அரசில் நடைமுறையில் இருந்தது.
  • இ‌த்தா‌லி  நா‌‌ட்டு பய‌‌ணியான நூ‌னி‌ஸ் விஜயநகர அரசு ஆனது 200‌க்கு‌ம் அ‌திகமான நாயக்குகளாகப் பிரிக்கப்பட்டதாகவு‌ம், கு‌றி‌ப்‌பி‌ட்ட அள‌வி‌ல் குதிரை, காலாட்படை வீரர்களைப் பராமரித்து தேவைப்படும் நேரத்தில் அரசருக்கு இராணுவச் சேவை செய்ய நாய‌க்குக‌ள் வற்புறுத்தப்பட்டார்கள் எனவும் கூறு‌கிறா‌ர்.
  • மேலு‌ம் இவ‌ர்க‌ள் இராமநவ‌மி ‌திரு‌விழா நேர‌த்‌தி‌ல் கு‌றி‌ப்‌பி‌ட்ட வருவாயை அர‌சி‌ற்கு வழ‌ங்‌‌கினர்.
  • நாய‌க்குக‌ள் ‌விவசா‌யிக‌ள், கை‌வினைஞ‌ர்களு‌க்கு வ‌‌ரி சலுகைகளை வழ‌ங்‌கினா‌ர்.    
Similar questions