இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப்பட்டவர் யார்? ஏன்?
Answers
பேரரசன் அலெக்சாந்தர் அல்லது மகா அலெக்சாண்டர் (Alexander the Great, கிரேக்கம்: Αλέξανδρος ο Μέγας அல்லது Μέγας Aλέξανδρος,[1] Megas Alexandros; சூலை 20, கிமு 356 - சூன் 10/ 11, கிமு 323), கிரேக்கத்தின்[2][3] பகுதியான மக்கெடோனின் பேரரசர் (கிமு 336–323). மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவரது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டார். இவர் பண்டைய அண்மை கிழக்கு, பண்டைய எகிப்து மற்றும் பாரசீகப் பகுதிகளை ஆண்ட அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் டேரியசை வென்றார்.
பேரரசன் அலெக்சாந்தர்
Alexander the Great
Alexander and Bucephalus - Battle of Issus mosaic - Museo Archeologico Nazionale - Naples BW.jpg
அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் டாரியசுடன் அலெக்சாந்தர் போரிடும் காட்சி
ஆட்சி
கிமு 336-323
முன்னிருந்தவர்
இரண்டாம் பிலிப்
பின்வந்தவர்
நான்காம் அலெக்சாண்டர்
வாரிசு(கள்)
நான்காம் அலெக்சாண்டர்
தந்தை
மசிடோனின் இரண்டாம் பிலிப்
தாய்
ஒலிம்பியாஸ்
அலெக்சாந்தர் அவரது தந்தை இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தார். இவர் பண்டைய அண்மை கிழக்கு பகுதிகளான அனதோலியா, சிரியா, போனீசியா, காசா, பண்டைய எகிப்து, அகாமனிசியப் பேரரசு, பாக்திரியா, மெசொப்பொத்தேமியா ஆகியவைகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தார்.
இறப்பதற்கு முன்பே, பாரசீக வளைகுடாவில் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தார். இதன் பின்னர் மேற்கே கார்த்தேஜ், ரோம், ஐபீரியக் குடாநாடு ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவரிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தார். இதனால் சில அறிஞர்கள் இவர் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார். அவரும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தார்.
பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் பாபிலோனில் காலமானார். இவரது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. மலேரியா, நஞ்சூட்டல், தைபோய்ட்டுக் காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய குடிப்பழக்கத்தால் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவர் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் ஹெலனிய காலம் எனப்படுவதுடன், இது கிரேக்கம், மையக்கிழக்கு, இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.
Explanation:
i think this will helpful for you.. plz mark it as brainlist
இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப்பட்டவர்
- இரண்டாம் அலெக்சாண்டர் என்று அழைக்கப்பட்டவர் அலாவுதீன் ஹசன் பாமன்ஷா ஆவார்.
காரணம்
- அலாவுதீன் ஹசன் பாமன்ஷா மிகச் சரியாகத் தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜ முந்திரி, கொண்ட வீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தினார்.
- மேலும் ராஜ முந்திரி மற்றும் கொண்ட வீடு ஆகிய அரசுகளை ஆண்டு தோறும் திறை (கப்பம்) செலுத்த வைத்தார்.
- கப்பத்தினை பெற அவர் மேற்கொண்ட முயற்சி அடிக்கடி போர்கள் ஏற்பட வழி வகுத்தது.
- எனினும் அலாவுதீன் ஹசன் பாமன்ஷா அனைத்து போர்களிலும் எதிரிகளை வென்றார்.
- போரில் வென்றதன் நினைவாக தான் வெளியிட்ட நாணயங்களில் தன் பெயரினை இரண்டாம் அலெக்சாண்டர் என பொறித்து வெளியிட்டார்.