பக்கீர் எனக் குறிப்பிடப்படுபவர் _________. அ. இஸ்லாமிய ஞானி ஆ. பௌத்தத் துறவி இ. இந்துத் துறவி ஈ. சீக்கிய குரு
Answers
Answered by
0
இஸ்லாமிய ஞானி
சூபியிஸம்
- இந்து மதத்தில் பக்தி இயக்கம் தோன்றியதை போல இஸ்லாம் மதத்தில் ஆன்மீக கருத்துக்களை உடையதாக சூபியிஸம் விளங்கியது.
- இஸ்லாமிய ஞானிகளைக் குறிப்பவையாக சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் பயன்படுத்தப்பட்டன.
- இஸ்லாமிய ஞானிகள் தியானம், யோகப் பயிற்சிகள், துறவறம், தியாகம் ஆகியவை மூலமாக உள் உணர்வுகளை அதிகரித்து இறை நிலையினை உணர்ந்தவர்களாக திகழ்ந்தனர்.
- சூபியிஸம் ஆனது 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியரின் சமூக வாழ்வில் செல்வாக்கு மிக்க சக்தியாக திகழ்ந்தது.
- சூபிகள் அனைத்துக்கும் மேலான அழகின் உச்சமாக இறைவன் திகழ்வதாக கருதினர்.
- சூபிகள் இறைவனை மஸ்க் எனவும், தங்களை ஆசிக் எனவும் கருதினர்.
- பிற்காலத்தில் சிஸ்டி, சுரவார்டி, குவாதிரியா, நஸ்பந்தி போன்ற பல பிரிவுகளைக் கொண்டதாக சூபியிஸம் மாறியது.
Similar questions