பக்தி இயக்கத்தின் விளைவுகளைச் சுட்டிக்காட்டுக
Answers
Answered by
0
பக்தி இயக்கத்தின் விளைவுகள்
- வர்ணாஸ்ரமக் கொள்கையின்படி பிராமணர், சத்தியர், வைசியர் என்ற சமூகத்தினை சார்ந்தவர்கள் மட்டுமே முக்தி அடைய முடியும் என்பதை மாற்றி அனைவரும் முக்தி பெற இயலும் என பக்தி இயக்கம் கூறியது.
- இது பெண்கள் மற்றும் சமூகத்தின் அடித்தட்டிலிருந்த மக்கள் ஆகியோருக்கும் சேர்த்து ஆன்ம விடுதலைக்கான வழியினை கூறியது.
- பிராந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையில் பக்தி இலக்கியங்கள் தோன்றின.
- பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் துவைதம், அத்வைதம் ஆகிய தத்துவக் கோட்பாடுகளை உருவாக்கினர்.
- அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுவது, பண்டிகைகள், விழாக்கள் நடத்துவது, புனிதப் பயணங்கள் செல்வது, சைவ, வைணவச் சடங்குகளை செய்வது முதலிய பிராந்திய பண்பாட்டு பழக்கங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளது.
Similar questions