கபீரிடமிருந்து சைதன்யர் எவ்வாறு வேறுபடுகிறார்?
Answers
Answered by
0
Answer:
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் வைணவ பக்தி நெறியைப் பரப்பிய இவர் ‘ஸ்ரீசைதன்ய மகா பிரபு’ என்று அழைக்கப்பட்டார்.இவரது இயற்பெயர் கௌரங்கன் என்பதாகும். இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தம் 25ம் வயதில் இல்வாழ்வைத் துறந்து இறைவன் திருப்பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கிருஷ்ணன் அல்லது ஹரி என அழைக்கப்படும் புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. சடங்குகளிலிருந்து விடுபட்டு, ஆடிப்பாடி உணர்வுப் பிழம்பாய் இறைவனின் அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும். கண்ணனை வழிபட்டு, குருவைப் பணிந்து பணிபுரிந்து வந்தால் மாயையில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடையலாம் என்றார்.
Explanation:
I think it is correct
Answered by
0
கபீரிடமிருந்து சைதன்யர் வேறுபடும் விதம்
கபீர்
- கபீரின் பாடல்கள் கடவுள் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்ற கருத்தை முன் வைத்தன.
- கபீர் எல்லா வேறுபாடுகளையும் கடந்து நிற்கும் இறைவனை புரிந்துகொள்ள மக்களை ஒருங்கிணைத்தார்.
- உருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு, சாதிமுறை ஆகியவற்றினை எதிர்த்த கபீர் அவற்றினை கைவிடப்பட வேண்டுமென உறுதியாக கூறினார்.
- கபீரின் இயக்கம் சாதியினால் பிரிந்த மக்களை பக்தியினால் ஒருமைப்படுத்தும் இயக்கமாக இருந்தது.
சைதன்யர்
- கபீரை போல் அல்லாமல் சைதன்யர் மற்ற கடவுள்களை காட்டிலும் கிருஷ்ணர் உயர்வானவர் என கருதி அவரை மட்டுமே வணங்கினார்.
- சைதன்யர் கிருஷ்ணரின் உருவ வழிபாட்டினை கடைபிடித்தார்.
- சைதன்யரின் இயக்கம் ஆனது ஒருமைப்பாட்டு இயக்கமாக இல்லலாமல் மீட்டெடுப்பு இயக்கமாக செயல்பட்டது.
Attachments:
Similar questions