இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஜஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் ___________ ஆவார். அ) குரு அர்ஜுன் தேவ் ஆ) குரு ஹர் கோபிந்த் இ) குரு தேஜ் பகதூர் ஈ) குரு ஹர் ராய்
Answers
Answered by
0
Sorry
But please ask your questions in English language then we can answer it
Answered by
0
குரு அர்ஜுன் தேவ்
ஜஹாங்கீர் (1605 -1627)
- பேரரசர் அக்பருக்கு பிறகு அவரது மகன் சலீம், நூருதீன் ஜஹாங்கீர் என்ற பட்டப் பெயருடன் அரியணை ஏறினார்.
- நூருதீன் ஜஹாங்கீர் அரசராக பொறுப்பு வகித்ததை எதிர்த்த ஜஹாங்கீரின் மூத்தமகன் இளவரசர் குஸ்ரு சீக்கிய குரு அர்ஜுன் தேவின் ஆதரவோடு ஜஹாங்கீர் அரசிற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டார்.
- எனினும் அரசர் ஜஹாங்கீரால் கலகம் ஒடுக்கப்பட்டது.
- இறுதியில் கலகத்தில் ஈடுபட்டதற்காக இளவரசர் குஸ்ரு கைது செய்யப்பட்டு அவரின் விழிகள் அகற்றப்பட்டன.
- இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஜஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டு குரு அர்ஜுன் தேவ் கொல்லப்பட்டார்.
- ஜஹாங்கீரின் ஆட்சியின் போது வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ என்ற இரு ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.
Attachments:
Similar questions