History, asked by anjalin, 9 months ago

ஜஹாங்கீர் மற்றும் ___________ அமைத்த ஷாலிமார் தோட்டங்கள், இந்திய தோட்டக் கலையில் குறிப்பிடத்தக்கவையாகும். அ) அக்பர் ஆ) ஷாஜகான் இ) ஹுமாயுன் ஈ) ஔரங்கசீப்

Answers

Answered by gayathirigv8187
0

Answer:

Shah jagan

Explanation:

Attachments:
Answered by steffiaspinno
0

ஷாஜகான்

முகலாய‌ர்க‌‌ள் கால‌த்‌தி‌‌ல் க‌ட்டட‌க்கலை  

  • முகலாயர் காலத்தில் கட்டடக் கலையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி உலக அள‌வி‌ல் புக‌ழ்பெ‌ற்றவை ஆகு‌ம்.
  • அக்பர் ஆட்சிக் காலத்தில் பாரசீகக் கட்டடக்கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கலைஞர்களால் கட்டப்பட்ட ஹுமாயூனின் கல்லறை உயர்த்தப்பட்ட தளத்தின் மீது வைக்கப்பட்டது.
  • ரஜபுத்திர பாணிகளை இணைத்துக் கட்டப்பட்ட க‌ட்டிட‌த்‌தி‌ற்கு உதாரணமாக ஆ‌க்ரா கோ‌ட்டை உ‌ள்ளது.
  • மேலு‌ம் அ‌க்ப‌ர் கால‌த்‌தி‌ல் பதேபூ‌ர் ‌சி‌க்‌ரி கோ‌ட்டையு‌ம், சிகப்புநிற மற்றும் பளிங்குக் கற்களால் புல‌‌ந்த‌ர்வாசாவு‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டன.
  • ஷாஜகான் காலத்தில் முழுவதும் பளிங்குக் கற்களால் உயர்த்தப்பட்ட தளத்தின் மீது கட்டப்பட்ட தா‌ஜ்மஹா‌ல் ஆனது உலக அ‌‌திசயமாகவு‌ம், செ‌ங்கோ‌ட்டை ஆனது திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால், ஹுரமஹால் போன்ற பிரமிப்பூட்டும் கட்டடங்களால் சூழப்பட்டு‌ம்  உ‌ள்ளது.
  • இந்திய தோட்டக் கலையில் குறிப்பிடத்தக்கவையாக ஜஹாங்கீர் மற்றும் ஷாஜ‌கா‌ன் அமைத்த ஷாலிமார் தோட்டங்கள் உ‌ள்ளன.  
Attachments:
Similar questions