India Languages, asked by mervin857, 9 months ago



விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்கு வாழ்த்துக்
கடிதம் எழுதுக.​

Answers

Answered by neerutomar1989
423

Answer:

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

8, முல்லை வீதி,

முத்தியால்பேட்டை,

புதுவை 3.

10.8.2019

அன்புள்ள நண்பனுக்கு,

உன்னை என்றும் மறவாத நண்பன் மணியன் எழுதும் கடிதம். இங்கு அனைவரும் நலம். உன் அப்பா, அம்மா, தம்பி, தங்கை அனைவரின் நலன் குறித்து எழுதவும்.

உங்கள் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளுள் நூறு மீட்டர் ஓட்டப்பந்தையம், உயரம் தாண்டுதல் போட்டி ஆகியவற்றில் நீ முதலிடம் பெற்று வெற்றி பெற்றதை அறிந்து நானும் என் பெற்றோரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தோம். உனக்கு எங்கள் பாராட்டுகள்.

நீ இன்னும் பயிற்சி எடுத்து, மண்டல அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட வேண்டும்.

அதிக வெற்றிகளைக் குவித்து, நீ படிக்கும் பள்ளிக்கும், உன் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று உன்னை வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

அன்புத் தோழன்

அ. மணியன்.

உறைமேல் முகவரி

மு. அறிவழகன்,

10, முத்துத் தெரு,

அடையாறு,

Explanation:

i hope it will help you

Answered by Devi22180
13

Answer:

விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனை / தோழியைப் பாராட்டிக் கடிதம் எழுதுக

you are 6th grade only know .

Similar questions