முகலாயர் ஆட்சியில் நிறுவப்பட்ட ஐரோப்பியக் குடியேற்றங்கள் பற்றி குறிப்பு வரைக
Answers
Answer:
முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கி. பி. 1526 தொடக்கம் முதல் 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்கிய-பாரசீக/ துருக்கிய-மங்கோலிய தைமூரியத் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். பாபர் தற்கால உஸ்பெகிஸ்தானில் இருந்து வந்தவர் ஆவார். அவர் சஃபாவிட் மற்றும் உதுமானிய பேரரசுகளின் உதவியையும் இப்போரில் வெல்ல பயன்படுத்திக் கொண்டார்.[1] முகல் என்பது மங்கோலியர் என்பதற்கான பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர் இஸ்லாம் சமயத்தைச் சேந்தவர்கள்.[2] இதன் அதிக பட்ச பரப்பளவை கொண்டிருந்த சமயத்தில் முகலாயப் பேரரசு தெற்காசியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக இருந்தது.
முகலாயர் ஆட்சியில் நிறுவப்பட்ட ஐரோப்பியக் குடியேற்றங்கள்
போர்த்துகீசியர்
- முகலாயர் ஆட்சியில் கோவா, மேற்குக் கடற்கரைப் பகுதிகள் (டாமன், சால்செட், பம்பாய்), கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் (சென்னைக்கு அருகே சாந்தோம், வங்காளத்தில் ஹுக்ளி) ஆகிய இடங்களில் போர்த்துகீசியர் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.
டச்சுக்காரர்
- டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டினம், புலிக்காட், சூரத், பிமிலிபட்டினம், காரைக்கால், சின்சுரா, காசிம்பஜார், பாராநகர், பாட்னா, பாலசோர், நாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் வணிக நிலையங்களை உருவாக்கினர்.
டேனியர்
- டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடி (தமிழ்நாடு), செராம்பூர் (வங்காளம்) ஆகிய இடங்களில் குடியேற்றங்களை நிறுவினர்.
பிரெஞ்சுக்காரர்
- சூரத், மசூலிப்பட்டினம், புதுச்சேரி, வங்காளத்தின் சந்தன்நகர் ஆகிய இடங்களில் குடியேற்றங்களை நிறுவினர்.
ஆங்கிலேயர்
- சூரத், சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் குடியேற்றங்களை நிறுவினர்.