கர்கானா பற்றி குறிப்பு வரைக
Answers
Answered by
0
கர்கானா
- கைவினைத் தொழிற்கூடங்களை சார்ந்து நகர்ப்புறப் பொருளாதாரம் அமைந்தது.
- பருத்தி இழைத் தொழிற் கூடங்களில் பஞ்சடித்துப் பட்டை இடுபவர், நூல் நூற்போர், நெய்வோர், சாயமேற்றுவோர், அச்சுப் பதிப்போர், சலவைச் செய்வோர் போன்ற வேலைகளை அதிக எண்ணிக்கையிலான மக்கள் செய்தனர்.
- இரும்பு, தாமிர, வைரச் சுரங்கங்கள் அமைத்தல், துப்பாக்கி தயாரித்தல் முதலியன தொழில்களும் நடைபெற்றன.
- விலை உயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற் கூடமாக கர்கானா என்ற தொழிற்கூடம் விளங்கியது.
- அரண்மனை சார்ந்த கர்கானாக்கள் அரச குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்தன.
- கர்கானாக்களில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடம்பரப் பொருட்களை வர்த்தகர்கள் உள்ளூர் மற்றும் தொலை தூரச் சந்தைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar questions