கபீர் பற்றி குறிப்பு வரைக
Answers
Answered by
0
கபீர்
- பக்தி இயக்கத்தின் மிக முக்கிய ஆளுமை கபீர் ஆவார்.
- நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்த கபீர் இராமானந்தரின் பன்னிரு சீடர்களில் ஒருவராக இருந்தார்.
- கபீர், இராமானந்தரிடம் வேதாந்தத் தத்துவத்தைக் கற்றுக் கொண்டார்.
- கபீர் ஒரு கடவுள் கோட்பாட்டினை கடைபிடித்தார்.
- கபீரின் பாடல்கள் கடவுள் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்ற கருத்தை முன் வைத்தன.
- கபீர் இந்து இஸ்லாமிய மதங்களில் காணப்பட்ட பிரிவினை வாதங்களையும், குறுகிய மனப்பான்மைகளையும் எதிர்த்தார்.
- உருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு, சாதி முறை ஆகியவற்றினை எதிர்த்த கபீர் அவற்றினை கைவிட வேண்டுமென உறுதியாக கூறினார்.
- வட இந்தியாவின் பெரும் பகுதியில் இவரின் பாடல்கள் வாய் மொழியாகவே பரவின.
Attachments:
Similar questions