மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்களை எழுதுக.
Answers
Answered by
2
Answer:
மராத்திய மக்கள் அல்லது மராத்தியர்கள் (மராத்தி: मराठी माणसं அல்லது महाराष्ट्रीय) என்போர் இந்தோ ஆரிய இனக்குழுவினராவார், இவர்கள் மகாராட்டிரத்திலும் மேற்கு இந்திய மாநிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்களின் மொழியான மராத்தி இந்தோ-ஆரிய மொழிகளின் தென் குழுவின் பகுதியாக உள்ளது. இவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 8 கோடியாகும்.
Answered by
0
மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்
மக்களின் இயல்பு
- கொங்கணம் என்ற குறுகலான நிலப்பகுதியில் மராத்தியர் வாழ்ந்தனர்.
- மராத்தியர் விசுவாசம், வீரம், ஒழுக்கம், தந்திரம், எதிரிகளை தாக்கும் ஆற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள்.
- மராத்தியர்கள் வலிமை வாய்ந்த கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றினர்.
- மராத்தியர்கள் திடீரென இரவு நேரங்களில் மின்னல் வேகத்தில் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்துவதில் திறமை கொண்டவர்களாக திகழ்ந்தனர்.
- மேலதிகாரியின் உத்தரவு வரும்வரை காத்திருக்காமல் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு வழிமுறைகளை மாற்றிச் செயல்படுத்தும் திறனை கொண்டவர்களாக மராத்தியர்கள் திகழ்ந்தனர்.
பக்தி இயக்கம்
- பக்தி இயக்கம் பரவியதன் மூலமாக மராத்தியர்களிடையே ஒற்றுமை உணர்வு ஏற்பட்டது.
- ராம்தாஸ், துக்காராம் ஆகிய மதத் துறவிகளின் கருத்துகள் சிவாஜியின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தின.
- துறவி ராம்தாஸ் அவர்களை சிவாஜி தனது குருவாக ஏற்று மரியாதை செலுத்தினார்.
Similar questions