வண்ணம் பூசப்பட்ட ‘கலம்காரி’ எனப்படும் துணிவகைகளுக்குப் பெயர் பெற்ற பகுதி ______________ஆகும். அ) வடசர்க்கார் ஆ) மலபார் இ) கொங்கணம் ஈ) சோழமண்டலம்
Answers
Explanation:
கலம்காரி கலை (தெலுங்கு: కలంకారి) (ஆங்கில மொழி: Kalamkari or Qalamkari) என்பது ஆந்திராவின் பழமையான கலையாகும். இக்கலை வடிவம் கையால் வரைந்தோ அல்லது அச்சுப் பதித்தோ தயாரிக்கப்படும் பருத்தி காடா துணி ஆகும். கலம்காரி என்பதன் பொருள் என்ன? பாரசீக மொழியில் கலம் என்றால் பேனா என்று பொருள். காரி என்பது கலைவடிவம் என்று பொருள்படும். கலம்காரி என்பது பேனாவால் செய்யப்படும் வேலைப்பாடு ஆகும். இந்த ஒவியங்கள் பெரும்பாலும் காளஹஸ்தி பகுதியில் உள்ள கோயில்களின் திரைச்சீலைகள், சுவரில் மாட்டும் ஓவியங்கள், தேரில் கட்டும் வண்ண வண்ணத் திரைச்சீலைகள் போன்றவற்றில் காண இயலும். போச்சம்பள்ளி துணி வகைகளிலும் காண முடியும்.[1]முகலாயர்கள் மற்றும் கோல்கொண்டா சுல்த்தான்களின் ஆதரவு பெற்ற இக்கலை தொடங்கி வளர்ந்தது ஆந்திரபிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினம் நகர் அருகே அமைந்துள்ள பெத்தனா என்னுமிடத்தில்.
சோழ மண்டலம்
கலம்காரி வகை துணிகள்
- வண்ணம் பூசப்பட்ட கலம்காரி என்ற துணி வகைகளுக்குப் பெயர் பெற்ற பகுதியாக சோழ மண்டலப் பகுதி விளங்கியது.
- கலம்காரி என்ற துணி வகைகளில் முதலில் அலங்காரக் கோடுகளோ அல்லது வடிவங்களோ வரையப்பட்டு பிறகு சாயம் ஏற்றப்பட்டது.
- 14 ஆம் நூற்றாண்டில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக இந்தோனேசியத் தீவுகளில் வாழும் மக்கள் விரும்பி வாங்கும் நுகர்வுப் பொருளாக கலம்காரி வகை துணிகள் திகழ்ந்தன.
- 18 ஆம் நூற்றாண்டு வரை துணிகளே இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மற்ற உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுள் மிக முக்கியமான பொருளாக திகழ்ந்தது.