கைவினைப்பொருள்கள் உற்பத்தி பற்றி ஒரு குறிப்பு வரைக
Answers
Answered by
0
கைவினைப் பொருள்கள் உற்பத்தி
- நகர்புறம் மற்றும் கிராமப் புறம் ஆகிய இரு இடங்களிலும் கைவினைப் பொருட்களின் உற்பத்தி நடைபெற்றது.
- நகரங்களில் உலோக வேலைகளும், கிராமங்களில் நெசவுத் தொழிலும் செய்யப்பட்டன.
- அந்த கால மக்கள் வேதியியல் பொருட்களை பயன்படுத்தி நிரந்தர வண்ணங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்று திகழ்ந்தனர்.
- சோழ மண்டலப் பகுதி வண்ணம் பூசப்பட்ட கலம்காரி வகை துணிகளுக்கு பெயர் பெற்றதாக இருந்தன.
- கலம்காரி என்ற துணி வகைகளில் முதலில் அலங்காரக் கோடுகளோ அல்லது வடிவங்களோ வரையப்பட்டு பிறகு சாயம் ஏற்றப்பட்டது.
- 14 ஆம் நூற்றாண்டில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக இந்தோனேசியத் தீவுகளில் வாழும் மக்கள் விரும்பி வாங்கும் நுகர்வுப் பொருளாக கலம்காரி வகை துணிகள் திகழ்ந்தன.
Similar questions