History, asked by anjalin, 8 months ago

டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழமண்டலப் பகுதியின் தலைமையிடம் ______________ ஆகும். அ) காரைக்கால் ஆ) புலிகாட் இ) மசூலிப்பட்டினம் ஈ) மதரா‌ஸ்

Answers

Answered by nallavan001
0

Explanation:

மதராஸ் ....................

Answered by steffiaspinno
1

புலிகாட் (பழவே‌ற்காடு)  

தமிழகத்தில் டச்சுக்கார‌ர்க‌ள்  

  • டச்சுக்காரர்க‌ள் பழவேற்காட்டில்  ஜெல்டிரியா எ‌ன்ற பாதுகாப்புக் கோட்டையைக் கட்டினர்.
  • 1605 ஆ‌ம் ஆ‌ண்டு ட‌ச்சு‌க்கார‌ர்க‌ள் மசூலிப்பட்டினத்தில் தங்கள் அதிகாரத்தை நிறுவினர்.
  • 1610  ஆ‌ம் ஆ‌ண்டு ட‌ச்சு‌க்கார‌ர்க‌ள் பழவேற்காட்டில் சில குடியேற்றங்களை நிறுவினர்.
  • மேலு‌ம் ட‌ச்சு‌க்கார‌ர்க‌ளி‌ன் காலனியாதிக்கப் பகுதிகளாக நாகப்பட்டினம், நாகர்கோவில், புன்னைக்காயல், பரங்கிப்பேட்டை, கடலூர் (திருப்பாதிரிப்புலியூர்), தேவனாம்பட்டினம் ஆகியவை இரு‌ந்தன.
  • டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழ மண்டலப் பகுதியின் தலைமையிடமாக பழ‌வே‌ற்காடு (ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் பு‌லிகா‌ட்) மா‌றியது.
  • பழவேற்காட்டிலிருந்து வைரம் மேலை நாடுகளுக்கு‌ம், ஜாதிக்காய், ஜாதிபத்ரி, கிராம்பு ஆகியவை ஐரோப்பாவிற்கு‌ம் அனுப்பப்பட்டன.
  • வ‌ங்காள‌ம், ட‌ச்சு‌க்கார‌ர்க‌ளி‌ன் குடியே‌ற்ற‌ப் பகு‌திகளான தே‌ங்கா‌ய் ப‌ட்டின‌ம் ம‌ற்று‌ம் காரை‌க்கா‌லி‌ல் இரு‌ந்து அடிமைக‌ள் பழவே‌ற்கா‌ட்டி‌ற்கு கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டன‌ர்.  
Attachments:
Similar questions