நாயக்க அரசுகள் யாவை? அவை நிறுவப்பட காரணம் என்ன?
Answers
Answered by
0
நாயக்க அரசுகள்
- 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே தெலுங்கு, கன்னடப் பகுதிகளில் இராணுவத் தலைவர் அல்லது இராணுவ வீரர் என்ற பொருளில் நாயக் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது.
- நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆவார்.
- விஜயநகர ஆட்சியின் போது நயங்காரா முறையின்படி தமிழகத்தில் செஞ்சி, தஞ்சாவூர், மதுரை ஆகிய மூன்று நாயக்க அரசுகள் நிறுவப்பட்டன.
நாயக்க அரசுகள் நிறுவப்பட காரணம்
- குறிப்பிட்ட அளவில் குதிரை, காலாட்படை வீரர்களைப் பராமரித்து தேவைப்படும் நேரத்தில் அரசருக்கு இராணுவச் சேவை செய்ய நாயக்குகள் வற்புறுத்தப்பட்டார்கள்.
- நாயக்குகள் விவசாயிகள், கைவினைஞர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கினார்.
- இராமநவமி போன்ற திருவிழா நேரங்களில் அரசிற்கு குறிப்பிட்ட அளவு வருவாயினை வழங்கினர்.
- மேற்கண்ட காரணங்களுக்காக நாயக்க அரசுகள் நிறுவப்பட்டன.
Answered by
0
Answer:
நாயக்க அரசுகள்
1.பெம்மாசணி நாயக்கர்கள்.
2.மதுரை நாயக்கர்கள்.
3.தஞ்சை நாயக்கர்கள்.
4.செஞ்சி நாயக்கர்கள்.
5.காளஹஸ்தி நாயக்கர்கள்.
6.சென்னபட்டினம் நாயக்கர்கள்.
விஜயநகர பேரரசு அழிந்தபின், அதன் கீழ் கவர்னராக இருந்தவர்கள் சுதந்திரம் பெற்று நாயக்க அரசுகளை உருவாக்கினர்.
Similar questions