நயம் பாராட்டுக.
தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே
Answers
Answer:
குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே தோங்குவாய் தண்டமிழ் மொழியே
யம் பாராட்டுக.
தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென்
Answer:
hope it helps u
Explanation:
ஆசிரியர் குறிப்பு:
பைந்தமிழ் ஆசான் எனப் புகழப்படும் கா.நமச்சிவாயர் வடஆற்காடுகாவேரிப்பாக்கத்தில் இராமசாமி. அகிலாண்டவல்லியின் இணையர்க்கு மகனாப் பிறந்தவர்.
திண்ணைப் பள்ளியிலும் பின்னர் மகாவித்துவான் மயிலை சண்முகம் பிள்ளையிடமும் தமிழைக்கற்றுத் தேர்ந்தாள்
2) திரண்ட கருத்து:
தமிழ் மொழி தேனினும் இனியது இந்தியத் திருநாட்டின் தென்பகுதியில் பேசப்படுகிறது. நம்முடைய உடலாகவும் உயிர் ஒளியாகவும். உணர்வாகும் உணாவினுள்ஒளிர்கின்ற மொழியாகவும் தமிழ் மொழி உள்ளது.வானளவு ஓங்கிய சிறப்பினையும் , உயிர்புகழிணையும் உடையது. தமிழ் மொழியே நமக்கு இருவிழிபோல் உள்ளது. தனிச்சிறப்புடையது. உயர் தனித்தமிழ் மொழியே !
நீ மேலும்மேலும் புகழ்பெற்று, இவ்வுலகில் செழிப்புற்று. ஒங்கி வளர்ச்சி பெறல் வேண்டும் என்று, ஆசிரியர் பாராட்டுகிறார்.
3)மையக் கருத்து:
தமிழ் தென்னாட்டு மக்களுக்கு ஊனினும் உணர்விலும் ஒன்றிய மொழி. இருகண்களாக விளங்குவது. மேலும் சிறப்புற வளரவேண்டும் என்பதே மையக் கருத்தாகும்.
4)மோனை நயம்:
முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மேனை நயம்
" மன்னனுக்கு தேவை சேனை
பாடலுக்கு தேவை மோனை "
தேனினும் தென்னாடு
:ஊனினும் - உணரவனும்
தானனி - தழைத்தனி - தண்டமிழ் ,
வானினும் -வண்டமிழ் - வயங்குதன்
5)எதுகை நயம்:
இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்
" மதுரைக்கு அழகு வைகை
. பாடலுக்கு அழகு எதுகை " .
தேனினும்-ஊனினும் ,
ஒண்டமிழ்-வண்டமிழ்-தண்டமிழ்
6)இயைபு நயம் :
பாடல் அடிகளில் இறுதி சீரில் உள்ள இறுதி எழுத்துக்கள் ஒன்றுபோல் அமைவது இயைபு நயம் ஆகும். இப்பாடலில் மொழியே என்னும் சொல் ஒவ்வொரு அடியின் இறுதியிலும் அமைந்துள்ளது.
7)சந்த நயம் :
" சந்த மில்லாப் பாட்டு
சொந்தமில்லா வீடு போன்றது ."
இப்பாடல் இசையோடு பாடுவதற்கு உரிய சந்த நயத்தே அமைந்துள்ளது. இப்பாடல் எண்சீர்க்கழிநெடிலர்யால் பாடப்பட்டுள்ளது.
8)அணி நயம் :
'' அணியற்றப் பாடல் அழகற்றுப் போகும் "
புலவர் இப்பாடலில் சொற்களை அழகுபடுத்த உவமையணி அமைந்துள்ளது.
தேனை விட இனிமையான செம்மொழி
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ்
வானைவிட. உயர்ந்த வண்டமிழ்