அல்புகர்க் பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
1
அல்புகர்க்
- 1509 ஆம் ஆண்டு போர்த்துகீசிய ஆளுநராக அல்மெய்டாவிற்கு பிறகு அல்புகர்க் பதவியேற்றார்.
- இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை உண்மையில் நிறுவியவர் அல்புகர்க் ஆவார்.
- ஐரோப்பியர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, போர்த்துகீசியர் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் குடியேறுவதை அல்புகர்க் ஆதரித்தார்.
- அல்புகர்க் பீஜப்பூரின் அரசர் யூசுப் அடில் கானைத் தோற்கடித்தார்.
- 1510 ஆம் ஆண்டு கோவாவைக் கைப்பற்றிய அல்புகர்க் முக்கிய வணிக மையமாக கோவையை மாற்றினார்.
- முஸ்லீம் வணிகர்களைத் தோற்கடித்து, தற்போது மலேசியாவில் உள்ள மலாக்காவை கைப்பற்றி போர்த்துகீசிய பேரரசினை விரிவடைய செய்தார்.
- 1515 ஆம் ஆண்டு ஆர்மசு துறைமுகம் ஆனது அல்புகர்கின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
- அல்புகர்க் உடன்கட்டை (சதி) ஏறும் வழக்கத்தை நிறுத்த முயன்றார்.
Attachments:
Similar questions