Geography, asked by sumark2283, 8 months ago

ஜாதவ்பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்?​

Answers

Answered by Anonymous
36

விடை:

" 2007 ல் இந்த பகுதிக்கு வேறு வேலையாக வந்தேன். இந்த பகுதியின் நில அமைப்பு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்போது மழை தொடர்ந்து பல ஆண்டுகள் பொய்த்து இருந்ததால், விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று, நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டு இருந்தார்கள். சூழலியல் மீது அக்கறை கொண்ட நண்பர்களிடம் பேசி நிதி திரட்டி, இடம்பெயர்ந்து கொண்டிருந்தவர்களிடமிருந்து நிலத்தை வாங்கினேன். ஏறத்தாழ நூறு ஏக்கர். நான் விவசாயி கிடையாது, விவசாயமும் தெரியாது.... ஆனால் கல்லூரிக் காலங்களில் ஆயிரக்கணக்கில் மரங்கள் நட்டு இருக்கிறேன். அந்த அனுபவத்தில் இந்த வறண்ட நிலத்தில், மரங்கள் நட துவங்கினேம். ஏக்கருக்கு 1300 மரங்கள் வீதம், இது வரை ஒரு லட்சத்து முப்பதாயிரம் மரங்கள் நட்டேன்...இப்படியாகதான் இந்த கூட்டுறவு காடு உருவானது."

Answered by Anonymous
28

Answer:

தனி நபராக, ஒரு காட்டை உருவாக்கியவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 'ஜாதவ் பயேங்' (Jadav Payeng). அசாம் மாநிலம், பிரம்மபுத்திரா நதியின் நடுவே, ஜோர்ஹாட் (Jorhat) என்ற இடத்தில் உள்ள, 'கோகிலாமுக்' (Kokilamukh) பகுதியில், மிகப் பெரிய வனத்தை உருவாக்கியவர்தான் இவர். கடந்த 36 ஆண்டுகளாக, 1,360 ஏக்கர் பரப்புள்ள ஒரு மணல்திட்டை காடாகச் செழித்து வளர செய்துள்ளார்.

தாக்கம்

பிரம்மபுத்திரா நதியில், 1979ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், பாம்புகள் அதிக அளவில் அடித்து வரப்பட்டன. வெள்ளம் வடிந்தபின், பல ஊர்வன இனங்கள் இறந்து கிடந்தன. இந்தச் சம்பவம், அப்போது 16 வயதுடைய ஜாதவ் பயேங்கிற்கு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மரங்கள் இன்றி அதிகரித்த புவி வெப்பத்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது என்பதை அவர் தெரிந்துகொண்டார்.

Similar questions