History, asked by steffiaspinno, 9 months ago

ஆளுநர் தாமஸ் மன்றோ பற்றிச் சிறு குறிப்பு வரைக.

Answers

Answered by anjalin
0

ஆளுநர் தாமஸ் மன்றோ

  • 1780 ஆ‌ம் ஆ‌ண்டு தாம‌ஸ் ம‌‌ன்றோ மதராஸ் வந்தடைந்தார்.
  • 1820 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கு ஆளுநராக தாமஸ் மன்றோ பொறுப்பே‌ற்றா‌ர்,
  • அத‌ன் ‌பிறகு ஏழு வருடங்கள் மெட்ராஸ் மாகாணத்திற்கு ஆளுநராக ப‌ணி பு‌ரி‌‌ந்தார்.
  • 1822 ஆம் ஆண்டு செ‌ன்னை‌யி‌ல்  இரயத்துவாரி முறையை தாம‌ஸ் ம‌ன்றோ செம்மையாக அறிமுகப்படுத்தினார்.
  • தாம‌ஸ் ம‌ன்றோ அவ‌ர்க‌ள் க‌ல்‌வி‌க்கான செலவீனங்களை எதிர் காலத்திற்கான முதலீடாகவே கருதினார்.
  • இ‌வ‌ர் ஆளுநராக இருந்த காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடு‌க்க‌ப்ப‌ட்டது.
  • தாம‌ஸ் ம‌‌ன்றோ ஆளுநராக இருந்த காலத்தில் அரசு நிர்வாகத்தில் இந்தியர்கள் பெருமளவில் பங்காற்றுவதை ஆத‌ரி‌த்தா‌ர்.
  • 1827 ஆம் ஆண்டு ஜூலை‌யி‌ல் காலரா நோ‌யினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு உ‌யி‌ரிழ‌ந்த இவ‌ரி‌ன் ‌சிலை 1839‌ல் செ‌ன்னை‌யி‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்டது.  
Attachments:
Similar questions