செல்வவளங்கள் நாட்டை விட்டு வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது – எவ்வாறு?
Answers
Answered by
0
செல்வவளங்கள் நாட்டை விட்டு வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது
- உள் நாட்டின் செலவுக் கட்டணம் என்ற வகையில் இந்தியாவில் இருந்து பெரிய தொகை ஆனது இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட இலாபம், ஐரோப்பிய அதிகாரிகள், ஐரோப்பிய வியாபாரிகள், தோட்ட முதலாளிகள், இராணுவம், குடிமைப் பணி அலுவலர்கள் உள்ளிட்ட பல ஐரோப்பியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை, இந்தியாவில் ஏற்பட்ட போர்களுக்கான செலவுகள், போர் நடத்துவதற்காக வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனுக்கான வட்டி மற்றும் இருப்புப் பாதை அமைக்க ஏற்பட்ட செலவுகள் முதலியன காரணங்களுக்காக செலவழிக்கப்பட்ட பணத்திற்கு ஈடாக விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தில் கடைசி பத்து ஆண்டுகளில் மொத்த வருவாயில் 24% 159 மில்லியன் பவுண்ட்கள் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டது.
- இவ்வாறு செல்வவளங்கள் நாட்டை விட்டு வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது.
Similar questions