காரன்வாலிஸின் நீதித்துறை நிர்வாகம் பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answer:
நீதித்துறை (judiciary, அல்லது அறமன்ற அமைப்பு) என்பது அரசால் இயற்றப்படும் சட்டங்களுக்கு சரியான புரிதல் கொடுத்து அவற்றைச் செயல்படுத்தும் நீதிமன்றங்களின் (அறமன்றங்களின்) அமைப்பாகும். நீதித்துறை பிணக்குகளுக்குத் தீர்வு காணும் அமைப்புக்களாகவும் உள்ளது. அதிகாரப் பிரிவினை கருதுகோளில் நீதித்துறை பொதுவாக சட்டமியற்றுவதுமில்லை (அதாவது, முழுமையான முறையில் இயற்றுவதில்லை;சட்டவாக்க அவைகளே இப்பொறுப்பை ஏற்றுள்ளன) அல்லது சட்டத்தை வலிந்து செயற்படுத்துவதுமில்லை (இது நிர்வாகத்துறையின் பொறுப்பாகும்); ஆனால் சட்ட விளக்கத்தைத் தருவதும் ஒவ்வொரு வழக்கிலும் தரவுகளுக்கேற்ப சட்டத்தை பயன்படுத்துவதும் இதன் பொறுப்புகளாக உள்ளன. சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமநிலையான நீதியை நிலைநிறுத்துவதே அரசின் இந்த அங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும். பொதுவாக இறுதி முறையீட்டு அறமன்றம் (உச்சநீதிமன்றம் அல்லது "அரசியல் யாப்பு நீதிமன்றம்" என இவை அழைக்கப்படும்) ஒன்றின் கீழ் அடுக்கதிகார முறையில் அமைந்த கீழ் அறமன்றங்களால் நீதித்துறை கட்டமைக்கப்பட்டிருக்கும்.
காரன் வாலிஸின் நீதித்துறை நிர்வாகம்
- காரன் வாலிஸ் அவர்கள் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரின் ஆலோசனையின் அடிப்படையில் நீதித் துறையினை சீரமைத்தார்.
- காரன் வாலிஸ் அவர்கள் ஆட்சியாளர்களை (Collectors) நீதித் துறை பொறுப்பில் இருந்து விடுவித்தார்.
- குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்களை காரன் வாலிஸ் முழுமையாக சீரமைத்தார்.
- நீதித் துறையின் உச்சங்களாக சதர் திவானி அதாலத்தும், சதர் நிசாமத் அதாலத்தும் திகழ்ந்தன.
- கல்கத்தா, தக்காணம், முர்ஷிதாபாத் மற்றும் பாட்னா ஆகிய நான்கு இடங்களில் தலா ஒன்று வீதம் மொத்தமாக நான்கு பிராந்திய முறையீட்டு நீதி மன்றங்கள் உருவாக்கப்பட்டன.
- இந்தியக் குடிமைப் பணிக்கு காரன் வாலிசின் தலையாய பங்களிப்பு குடிமைப் பணிகளில் கொண்டு வந்த சீர்திருத்தமே ஆகும்.
- காரன் வாலிஸ் அவர்கள் இந்தியக் குடிமைப் பணிகளில் திறமை வாய்ந்தவர்கள் மற்றும் நேர்மையான மனிதர்களை பணியமர்த்த வழிவகை செய்தார்.