கோல் பழங்குடியினரின் எழுச்சியைப் பற்றி விளக்குக.
Answers
Answered by
0
கோல் பழங்குடியினரின் எழுச்சி
- 1831-32 ஆம் ஆண்டுகளில் ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய பகுதிகளில் உள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் முதலிய இடங்களில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சியே கோல் கிளர்ச்சி ஆகும்.
- சோட்டா நாக்பூர் அரசர் பல கிராமங்களை பழங்குடிகள் அல்லாத மக்களுக்கு குத்தகைக்கு விட்டதே கோல்களின் கிளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
- கோல் கிளர்ச்சிக்கு தூண்டு கோலாய் இருந்தவர் பிந்த்ராய் மன்கி ஆவார்.
- புத்தபகத் என்பவர் கோல் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
- வட்டிக்கு பணம் கொடுப்போர் மற்றும் வர்த்தகர்கள் முதலியோரை கொல்லும் அளவிற்கு கிளர்ச்சி சென்றது.
- புத்தபகத் கொல்லப்பட்டதும், பிந்த்ராய் மன்கி சரணடைந்ததும் கோல்களின் போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.
Similar questions