சமூக நீதிக்கு ஜோதிபா பூலேயின் பங்கு என்ன?
Answers
Answered by
1
சமூக நீதிக்கு ஜோதிபா பூலேயின் பங்கு
- ஜோதிபா பூலே அவர்கள் 1873 ஆம் ஆண்டு சத்ய சோதக் சமாஜம் (உண்மை தேடும் சங்கம்) என்ற அமைப்பை நிறுவினார்.
- விடுதலைக்கான புரட்சிகரமான காரணியாக மக்களின் கல்வி இருக்கும் என கூறினார்.
- ஜோதிபா பூலே அவர்கள் ஆங்கில அரசாங்கத்திடம் விவசாய வர்க்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மக்களுக்குக் கட்டாய தொடக்கக் கல்வியை கற்பிக்குமாறு வற்புறுத்தினார்.
- 1851 ஆம் ஆண்டு தன் துணைவியார் சாவித்ரியின் உதவியோடு புனேயில் பெண்களுக்கென ஒரு பள்ளியையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு பள்ளியையும் தொடங்கினார்.
- மேலும் கைம்பெண்களின் குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தையும், தீண்டத்தகாதவர்களுக்காக ஒரு பள்ளியையும் நிறுவினார்.
- இவரின் பணிகளால் பிற்காலத்தில் மகாராஷ்டிராவில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றியது.
Attachments:
Similar questions