இராமலிங்க அடிகளார் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answers
Answered by
5
Answer:
I LOVE TAMIL! Hope you do so nanba!
Explanation:
திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.
Answered by
1
இராமலிங்க அடிகளார்
- கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வள்ளலார் என்ற அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் அவர்கள் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்.
- முறையான கல்வியை பெறாத இரமாலிங்க அடிகளார் பாடல் எழுதும் அளவிற்கு புலமை பெற்று திகழ்ந்தார்.
- இராமலிங்க அடிகளின் பாடல்கள் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டிருந்தன.
- அவர் மத வெறியையும், பகுத்தறிவற்ற தன்மையையும் கண்டனம் செய்தார்.
- இவர் சத்திய தர்ம சாலையினை வடலூரில் நிறுவினார்.
- 1860 ஆம் ஆண்டுகளில் பஞ்சங்களும் கொள்ளை நோயும் ஏற்பட்ட போது இவர் சாதி சமய வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமபந்தி விருந்தினை அளித்தார்.
- சத்திய ஞான சபை எனும் அமைப்பை நிறுவினார்.
- மக்களை கவர்ந்த இவரின் பாடல்கள் திருவருட்பா என்ற பெயரில் இவரின் சீடர்களால் வெளியிடப்பட்டது.
Attachments:
Similar questions