சுவாமி விவேகானந்தர் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answer:
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது
சுவாமி விவேகானந்தர்
- இராமகிருஷ்ண பரம்ஹம்சரின் சீடர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் நரேந்திரநாத் தத்தா என்ற இயற்பெயரினை உடைய சுவாமி விவேகானந்தர் ஆவார்.
- சுவாமி விவேகானந்தர் அவர்கள் இராமகிருஷ்ண பரம்ஹம்சரின் கருத்துகளை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டு சென்றார்.
- இநதியா முழுவதும் சுவாமி விவேகானந்தருக்கு சீடர்கள் உருவாக அவரின் கல்வி அறிவும் பேச்சு ஆற்றலும், ஆன்மீக தோற்றமும், வியத்தகு ஆளுமையும் காரணமாக அமைந்தது.
- 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உலகச்சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றி அங்கு இருந்த அனைவரின் மனதிலும் ஆழமான தாக்கத்தினை உருவாக்கினார்.
- இவர் நவீன இந்தியாவின் விடிவெள்ளி என அழைக்கப்படுகிறார்.