ஏட்டிலெழுதா கவிதை என அழைக்கப்படுவது அ) நாட்டார் பாடல்கள் ஆ) சங்கப் பாடல்கள் இ) கீர்த்தனைகள் ஈ) காப்பியப் பாடல்கள்
Answers
Answered by
2
Answer:
நாட்டார் பாடல் அல்லது நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை(நடவு) மற்றும் ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்தக் காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொலிக்கும்.
Answered by
2
நாட்டார் பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்
- நாட்டுப்புறப் பாடல்கள் ஆனது சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, கலை போன்றவற்றை வெளிப்படுத்தும் காலக் கண்ணாடியாக திகழ்கின்றது.
- உழைகின்ற போது களைப்புத் தோன்றாமல் இருக்கவும், தம் வாழ்வில் பெறும் அனுபவங்களை வெளிப்படுத்தவும் நாட்டுப் புறங்களில் வாழும் மக்களால் நாட்டுப்புறப் பாடல்கள் பாடப்படுகின்றன.
- எந்தவொரு புனைவுகள் இல்லாமல் இயல்பாக மக்களின் உணர்வுகள் மற்றும் மனப்பதிவுகளை பதிவு செய்வதாக நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.
- மக்கள் நாட்டுப்புறப் பாடல்களை நாடோடிப் பாடல், பாமரப் பாடல், மரபுவழிப் பாடல், பரம்பரைப் பாடல், நாட்டார் பாடல், மக்கள் பாடல், ஏட்டில் எழுதாக் கவிதை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
- நாட்டுப்புறப் பாடல்கள் தற்போதும் மண்ணின் மணம் மாறாமல் இசைத் தன்மையோடு ஒலிக்கின்றது.
Similar questions