India Languages, asked by anjalin, 8 months ago

நா‌ட்டு‌ப்புற‌ப் பாட‌ல்க‌ள் எ‌ன்பது யாது?

Answers

Answered by Anonymous
1

 \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \:  \: \huge\bold{விடை}

நாட்டுப்புறப் பாடல்கள் முன்னைப் பழமைக்கும் பழமை வாய்ந்தவை. பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குகின்றன. இப்பாடல்கள் இனியவை, எளியவை, எழுதப்படாதவை, வாயில் பிறந்து, செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெறுபவை. இப்பாடல்கள் என்று பிறந்தவை, எவரால் பாடப்பெற்றவை என்று உறுதியாக அறுதியிட்டுச் சொல்ல முடியாத பெருமையினைக் கொண்டவை. இப்பாடல்கள் எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று எதுகை, மோனை, இயைபு, இரட்டைக் கிளவி என்ற யாப்பிலக்கணத்தின் கட்டுக் கோப்பில் அமைந்துள்ளன.

நாட்டுப்புறப் பாடல் வகைப்பாடு

நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல், நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன. முனைவர் சு. சக்திவேல் சூழல் அடிப்படையில் எட்டாகப் பிரித்து, அவற்றில் உட்பிரிவுகளையும் வகைப்படுத்தியுள்ளார்.

தாலாட்டுப் பாடல்கள்

தாலாட்டுப் பாடல் என்பது தாய்மை உணர்வின் வெளிப்பாடாகும். அப்பாடல்களில் வெளிப்படும் உணர்வுகளின் தன்மையினை நான்கு கூறுகளாகப் பிரித்துள்ளார்.

1) குழந்தை பற்றியன.

2) குழந்தைக்குரிய பொருள்கள் பற்றியன.

3) குழந்தைகளின் உறவினர் பெருமை பற்றியன.

குழந்தைப் பாடல்கள்

குழந்தைப்பாட்டுகள் குழந்தை உள்ளத்தைப் புலப்படுத்துவனவாக அமைந்திருக்கும். அதில் பொருள் அமைவதைவிட ஓசை நிறைவுகளே அதிகமாகக் காணப்படும். இப்பாடல்களை மேலும்,

1) குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள்.

2) (குழந்தைப் பாடல்கள்) மற்றவர்கள் பாடுவது.

3) சிறுவர் பாடல்கள்.

என்றும் பிரித்துப் பார்க்கலாம்.

தொழில் பாடல்கள்

மனிதர்கள் கூடித் தொழில் செய்யும்போது அக்கூட்டுறவில் பிறப்பவை தொழில் பாடல்கள். தொழில் பாடல்களிலே அன்பு மலர்வதையும், பாசம் பொங்குவதையும், உழைப்பின் ஆர்வத்தையும், நன்மையில் ஈடுபாட்டையும், தீமையில் வெறுப்பையும் காணலாம். தொழில் பாடல்கள் தொழிலாளர்களது இன்ப துன்பங்களையும், நெஞ்சக் குமுறல்களையும், ஆசாபாசங்களையும், விருப்பு, வெறுப்புகளையும் வெளியிடுகின்றன. தொழில் பாடல்களை ஏலோலங்கிடி பாட்டு, தில்லாலங்கடி பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, ஏற்றப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என்றெல்லாம் வழங்குவர்.

கொண்டாட்டப் பாடல்கள்

மனிதன் தன் மகிழ்ச்சியினை ஆடியும் பாடியும் பலரோடு கலந்து கொண்டாடுகிறான். அவ்வெளியீட்டில் தொன்மையான கலைச் சிறப்பையும் மக்களது பண்பாட்டின் சிறப்பினையும் அறியமுடியும். மனிதனின் உழைப்பிற்குப்பின், அவனது மனமானது ஆடல், பாடல்களில் ஈடுபடுகிறது. இப்பாடல்களை அகப்பாடல், புறப்பாடல் என்று பிரிக்கலாம்.

அகப்பாடல்

சமூகத்திலுள்ள பலரும் இணைந்து குழுவாகப் பாடப்படுவது. பூப்புச் சடங்குப் பாடல், திருமணம், பரிகாசம், நலுங்கு, ஊஞ்சல், வளைகாப்புப் பாடல்கள் போன்றவற்றைக் கூறலாம்.

புறப்பாடல்

பலரும் கலந்தாடும் கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களில் பாடப்படும் பாடல்களைப் புறப்பாடல்கள் எனலாம்.

பக்திப் பாடல்கள்

ஆதி காலத்தில் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். இயற்கையின் சக்திகளைத் தெய்வங்களாகக் கருதி வழிபட்டனர். அதிலிருந்து விழாக்களும், பண்டிகைகளும், பலிகளும் தோற்றம் பெற்றன. இவ்வழிபாடுகளை மூன்று நிலைகளில் மக்களிடையே காணமுடியும்.

1) இயற்கை வழிபாட்டுப் பாடல்கள்.

2) சிறுதெய்வப் பாடல்.

3) பெருந்தெய்வப் பாடல்.

சான்று : இயற்கை வழிபாட்டுப் பாடல்

  • சந்திரரே சூரியரே
  • சாமி பகவானே
  • இந்திரரே வாசுதேவா
  • இப்பமழை பெய்யவேணும்
  • மந்தையிலே மாரியாயி
  • மலைமேலே மாயவரே
  • இந்திரரே சூரியரே
  • இப்பமழை பெய்யவேணும்

இப்பாடலில் தொன்று தொட்டு வரும் இயற்கை வழிபாட்டைக் காணலாம். நிலா, மழை, ஒளி, பாம்பு, பசு ஆகியவற்றை நாட்டுப்புற மக்கள் வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடும்போது இத்தகைய இயற்கைப் பாடல்களைப் பாடுகின்றனர்.

Answered by steffiaspinno
0

நா‌‌ட்டு‌ப்புற‌ப் பாட‌ல்க‌ள்  

  • நா‌ட்டு‌ப் புற‌ங்க‌ளி‌ல் வா‌ழு‌ம் ம‌க்‌க‌ளா‌ல் உழை‌கி‌ன்ற போது களை‌ப்பு‌‌த் தோ‌‌ன்றாம‌ல் இரு‌க்கவு‌ம், த‌ம் வா‌ழ்‌வி‌ல் பெறு‌ம் அனுபவ‌ங்களை வெ‌ளி‌ப்படு‌த்தவு‌ம் நா‌‌ட்டு‌ப்புற‌ப் பாட‌ல்க‌ள் பாட‌ப்படு‌கி‌ன்றன.
  • சமுதாய‌த்‌தி‌ன் நாக‌ரிக‌ம், ப‌ண்பாடு, கலை போ‌ன்றவ‌ற்றை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் கால‌க் க‌ண்ணாடியாக ‌நா‌‌ட்டு‌ப்புற‌ப் பாட‌ல்க‌ள் திக‌ழ்‌கி‌ன்றது.
  • எ‌ந்தவொரு புனைவுக‌‌ள் இ‌ல்லாம‌ல் இய‌ல்பாக ம‌க்க‌ளி‌ன் உ‌ண‌ர்வுக‌ள் ம‌ற்று‌ம் மன‌ப்ப‌திவுகளை ப‌திவு செ‌ய்வதாக நா‌‌ட்டு‌ப்புற‌ப் பாட‌ல்க‌ள் உ‌ள்ளன.
  • நாடோடி‌ப் பாட‌ல், பாமர‌ப் பாட‌ல், மரபுவ‌ழி‌‌ப் பாட‌ல், பர‌ம்பரை‌ப் பாட‌ல், நா‌ட்டா‌ர் பாட‌ல், ம‌க்க‌ள் பாட‌‌ல், ஏ‌ட்டி‌ல் எழுதா‌க் க‌விதை என பல‌ பெ‌ய‌ர்‌க‌ளி‌ல் ம‌க்க‌ள் நா‌ட்டு‌ப்புற‌ப் பாட‌ல்களை அழை‌‌க்‌கி‌ன்றன‌ர்.
  • நா‌ட்டு‌ப்புற‌ப் பா‌ட‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ம‌ண்‌ணி‌ன் மண‌ம் மாறாம‌ல் இசை‌த் த‌ன்மை‌யோடு ஒ‌லி‌‌க்‌கி‌ன்றது.  
Similar questions