India Languages, asked by maghaananthi, 7 months ago

சுற்றுப்புறச்சூழல் மாசுபடுதலும் தடுக்கும் வழிமுறைகளும்

Answers

Answered by expertgenius1st
1

Answer:

சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும்.

சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது. தற்பொழுது உலகை அச்சுறுத்தும் பத்து அச்சுறுத்தல்களில் சூழ்நிலை சீர்கேடும் ஒன்று என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது[1]. சூழல் மாசானது சில வேதியியல் பதார்த்தங்களாகவோ, அல்லது வெப்பம், ஒளி, ஒலி போன்ற சக்திகளாலானதாகவோ இருக்கலாம். பல்வேறு காரணங்களால் சூழல் மாசடைகின்றது.

நீர் மாசடைதல்

தொழிற்சாலைகள், வேளாண் நிலங்கள், வேளாண் பண்ணைகள், நகர்ப்புறக் கழிவுகள் முதலியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும், வடிகால்களிலும், வேறு நீர்நிலைகளிலும் கலந்துவிடுவதால் நீரின் தரமும், நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் புவியின் நீர்வளங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும் வளிமண்டலத்தில் கலக்கும் மாசுகள் மழைநீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன. இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும், ஆறுகள், குளங்கள் முதலியவற்றையும் மாசுபடுத்துகின்றன. எனினும் இவை முன் குறிப்பிட்டவற்றை விட குறைந்தளவிலேயே பாதிப்பைத் தருகின்றன.

Similar questions