தொடக்க காலத்தில் தமிழில் புதுக்கவிதை முயற்சியை மேற்கொண்ட கவிஞர்கள் யாவர்?
Answers
Answer:
நவீன உலக மனிதனின் இருப்பு தான் எனது கவனமாகிறது. எவ்வளவு விதமான சாத்தியங்களுக்கு மனித இருப்பை நகர்த்த முடியும்? பிறப்பு, உடல், சாதி, நிறம், மரணம் எதுவுமே நமது தேர்வில் இல்லை. நமது இருப்பு மட்டும் தான் குறைந்த பட்சம் நமது தேர்வில் இருப்பது போல தோன்றுகிறது. ஆனால், மனித இருப்பை சட்டதிட்டங்களால் சமூகம் இறுக்குகிறது, திட்டமிடுகிறது. அப்போது குறிப்பிட்ட வாய்ப்புகளே உள்ள வாழ்வை வாழத் தள்ளப்படுகிறோம். உலக வாழ்வே ஒரு அலுவலக நடைமுறையாகிவிட்ட இந்த நிலையில் மனிதன் தன் வாழ்விற்கான சாத்தியங்களை விஸ்தரித்துக்கொண்டு போவதன் மூலமாகத்தான் அர்த்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
– பிரான்ஸ் காஃப்கா
தன் காலத்திய உலகமே ஒரு அலுவலகமாக மாறி விட்டதாக காஃப்கா கருதுவது மிகச் சரியான கணிப்பு. இன்றைய இந்த நிலையில் வேறு வெளிகளை நோக்கியும் கட்டுப்பாடற்ற வெட்டவெளிகளின் சுவாசத்தை நோக்கியும் நம்மை அழைத்துச்செல்ல படைப்பாளி விழைகிறான். அவன் காட்டும் திசைகளில் தான் நம் வாழ்வுக்கான கனவும், சுதந்திரமும், கொண்டாட்டமும் தங்கி இருக்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கவிமொழி கொண்டது நம் தமிழ். “தமிழ் கவிமொழி” படைப்பாளிக்கு இது பலம்; சவால்; பலவீனம். காலத்துக்கும் மனித வாழ்வுக்கும் மொழிக்குமான உறவை பேணுவதில் நவீன தமிழ்க் கவிதை படைப்பாளிகளான கவிஞர்கள் அப்படியொன்றும் சோடைப்போய்விடவில்லை. இன்றைய “நவீன விருட்சம்” என்ற நிலையை அடைய கவிதை மேற்கொண்ட தன்னிலை மாறுதல்கள் பல உண்டு.
பாரதிக்குப்பின் 1921 – 1934 காலக்கட்டத்தில் கவிதை எழுதியுள்ளவர்களில் முக்கியமானவர்களாக பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் வே. இராமலிங்கம் பிள்ளை ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். மரபு வழிக் கவிதை அமைப்பில் பல புதுமைகளைச் செய்து இசைப்பாடல்களை கவிதையின் தரத்திற்கு உயர்த்தி தமிழ்க் கவிதைப்போக்கில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய – பாரதி, தன் இறுதிக்காலத்தில் வசன கவிதை முயற்சிகளையும் மேற்கொண்டார். பாரதியின் வசன கவிதை முயற்சியை தமிழில் புதுக்கவிதை இயக்கத்திற்கான விதை என்று கொள்ளவேண்டும்.
தொடக்க காலத்தில் தமிழில் புதுக்கவிதை முயற்சியை மேற்கொண்ட கவிஞர்கள்
- யாப்பிலக்கண வரையறைக்கு உட்படாமல் சுதந்திரமான வெளிப்பாடு மற்றும் கட்டற்ற தன்மையினை உடையதாக இயற்றப்படும் கவிதைகளை புதுக்கவிதைகள் ஆகும்.
- தொடக்க காலத்தில் தமிழில் புதுக்கவிதை எழுத முயற்சியை மேற்கொண்ட முதல் கவிஞர் பாரதியார் ஆவார்.
- தமிழில் புதுமையான வடிவில் எழுதப்பட்ட முதல் வசன கவிதை பாரதியார் எழுதிய காட்சி என்ற தலைப்பில் அமைந்த கவிதை ஆகும்.
- பாரதியை தொடர்ந்து பல கவிஞர்கள் தமிழில் புதுக்கவிதை எழுத முற்பட்டனர்.
- அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களான ந.பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியன், புதுமைப் பித்தன் போன்றோர் மணிக்கொடி இதழில் புதுக்கவிதைகளை எழுதி உள்ளனர்.
- ந. பிச்சமூர்த்தி அவர்கள் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.