எழுத்து இதழில் கவிதை படைத்தவர்களை எழுதுக.
Answers
Answer:
எழுத்து 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் சி. சு. செல்லப்பா ஆவார். இது இலக்கிய விமர்சன இதழாகத் தொடங்கி, இலக்கு வழுவாது நுணுக்க படைப்புக்களை வெளியிட்டது.
எழுத்து இதழை 1959 சனவரி மாதம் சி. சு. செல்லப்பா தோற்றுவித்தார். புதுக்கவிதை வளர்ச்சிக்கு எழுத்து இதழ் துணைபுரிந்தது. இவ்விதழில் ந. பிச்சமூர்த்தி, க. நா. சுப்ரமணியன், தி. சோ. வேணுகோபாலன், டி. கே. துரைசுவாமி, பசுவய்யா, எஸ். வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, சி. மணி போன்றோர் புதுக்கவிதைகள் எழுதிப் பங்களித்தனர். 1962ஆம் ஆண்டு 24 கவிஞர்களின் 63 கவிதைகளைத் தொகுத்து, புதுக்குரல்கள் என்னும் தொகுப்பை சி. சு. செல்லப்பா வெளியிட்டார். 119 வது இதழோடு எழுத்து நின்றுபோனது. எழுத்து இயக்கக் காலமாக 1950-70 காலகட்டம் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
எழுத்து இதழில் கவிதை படைத்தவர்கள்
எழுத்து காலம்
- சி.சு. செல்லப்பா தொடங்கிய எழுத்து என்ற இதழ் புதுக்கவிதையின் சோதனை முயற்சிகளை வெளியிட்டது.
- எழுத்து இதழ் ஆனது புதுக்கவிதை மறுமலர்ச்சியும், வலிமையும் பெற்றதில் முக்கிய பங்கு வகித்தது.
- எழுத்து இதழ் ஆனது புதிய கவிஞர்களின் கவிதைகளுக்குக் களத்தினை அமைத்துக் கொடுத்து உள்ளது.
- மயன், சிட்டி, வல்லிக் கண்ணன், வேணு கோபாலன், டி.கே. துரைஸ்வாமி (நகுலன்), தருமுசிவராமு (பிரமிள்), சி.மணி, சுந்தர ராமசாமி (பசுவய்யா) மற்றும் எஸ்.வைத்தீஸ்வரன் போன்றோர் எழுத்து இதழில் கவிதை படைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
- எழுத்து காலத்தில் தமிழில் எழுதப்பட்ட புதுக்கவிதைத் தொகுப்பாக புதுக்குரல்கள் என்ற நூல் வெளி வந்தது.