சுந்தர கவிராயர் கண்ட மூன்று தலைகள் எவை எவை?
Answers
Answered by
0
சுந்தர கவிராயர் கண்ட மூன்று தலைகள்
சுந்தர கவிராயரின் தனிப்பாடல்
- பத்துக்கால் மூன்றுதலை பார்க்கும்கண் ஆறுமுகம்
- இத்தரையில் ஆறுவாய் ஈரிரண்டாம் - இத்தனையும்
- ஓரிடத்தில் கண்டேன் உகந்தேன் களிகூர்ந்தேன்
- பாரிடத்தில் கண்டே பகர்.
பாடலின் பொருள்
- பத்துக் கால்கள், மூன்று தலைகள், பார்க்கின்ற ஆறு கண்கள், ஆறு முகங்கள், நான்கு வாய்கள் ஆகிய இத்தனையும் கொண்ட ஒன்றை இந்த உலகில் ஒரே இடத்திலேயே பார்த்தேன்.
- அதன்மீது விருப்பம் கொண்டேன்.
- மகிழ்ச்சி அடைந்தேன்.
- இந்த புதுமையைக் கண்டு என்னவென்று கூறுவாயாக.
மூன்று தலைகள்
- சுந்தர கவிராயரின் தனிப்பாடல் இரு காளைகளை கொண்டு நிலத்தினை உழும் காட்சியினை கூறுகிறது.
- இரு காளைகளின் தலைகளும், மனித தலையும் சேர்த்து மூன்று தலைகளை கண்டதாக சுந்தர கவிராயர் கூறுகிறார்.
Attachments:
Similar questions
English,
3 months ago
Computer Science,
3 months ago
English,
10 months ago
World Languages,
10 months ago